Advertisement

ஊட்டுக்கால்வாய் சீரமைக்க ரூ.35 கோடி தேவை

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு ஊட்டுக்கால்வாயில், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து, அதை சீரமைக்க, 35 கோடி ரூபாய் நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் பயனடையும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில், வேட்டைக்காரன்புதுார், ஆழியாறு ஊட்டுக்கால்வாய், சேத்துமடை, பொள்ளாச்சி ஆகிய, நான்கு கால்வாய்கள் வழியாக தண்ணீர் வினியோகம் செய்யப்
படுகிறது.
இதில், சர்க்கார்பதி பவர் ஹவுசில் இருந்து, காண்டூர் கால்வாய் வழியாக ஆழியாறு ஊட்டுக்கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. 13.4 கி.மீ., தொலைவுள்ள கால்வாயில் பெரும்பாலான இடங்களில் புதரும், மண் குவியலும் படிந்துள்ளன. தற்போது, பொதுப்
பணித்துறையினர் ஊட்டுக்கால்வாயில் மண், புதர்கள் அகற்றி குடிமராமத்து பணி மேற்கொண்டுள்ளனர். ஆங்காங்கே, சிறு மதகுகள் சீரமைப்பு பணியும் நடக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம், பெய்த பருவமழையால் கால்வாயில் ஏற்பட்ட பாதிப்புகள், சிதிலமடைந்த பெரிய மதகுகள் உள்ளிட்டவையை ஆய்வு செய்து, அவற்றை சீரமைக்க அரசிடம், 35 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளனர். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நரேந்திரன் கூறுகையில், ''கடந்த 2015 - 16ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட, 20 கோடி ரூபாயில் ஆழியாறு ஊட்டுக்கால்வாயில் முதல், 6 கி.மீ., சீரமைக்கப்பட்டது. மீதமுள்ள பகுதிகளை சீரமைக்க அரசிடம், 35 கோடி ரூபாய் நிதி கேட்டு கருத்துரு அனுப்பி உள்ளோம். நிதி கிடைத்ததும், கால்வாய், மதகுகள் சீரமைக்கப்படும்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement