Advertisement

கயிறு அறுந்து பெயின்டர் பலி

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பெயின்டிங் பணியில் ஈடுபட்டிருந்தவர், கயிறு அறுந்ததால், கீழே விழுந்து இறந்தார்.

பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன்,47; பெயின்டர். இவர், நேற்று பொள்ளாச்சி மகாலிங்கபுரம் விஜயராகவன் வீதியில் குடியிருப்பு ஒன்றின் முதல் தளத்தில், 'பெயின்டிங்' பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவகையில், கயிறு அறுந்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த கண்ணன், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement