Advertisement

மாவட்ட உழவர் உற்பத்தியாளர் மன்றங்கள் 'இ-நாம்' திட்டத்தில் இணைக்க ஆலோசனை

விருத்தாசலம்:உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை, விற்பனைத் துறையின் 'இ-நாம்' (தேசிய வேளாண் சந்தை) திட்டத்தில் இணைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் நடந்தது.


கூட்டத்திற்கு, தனி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட விற்பனைக்குழு செயலர் தேவேந்திரன் முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் கமிட்டி பணியாளர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளின் விளை பொருட்களை 'இ-நாம்' திட்டத்தில் கொள்முதல் செய்வதைப் போன்று, குழுவாக செயல்படும் உற்பத்தியாளர் மன்றங்களை 'இ-நாம்' திட்டம் மூலம் இணைத்து, அவர்களின் விளை பொருட்களை கொள்முதல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement