Advertisement

ஒருமாதமாக அடிக்கடி மின்தடை: மக்கள் அவதி

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுவதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.


மின்தடை குறித்து அப்பகுதி மக்கள் தொரப்பாடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தாலும் உடனடியாக சீரமைப்பதில்லை. மேலும், தினமும் காலை வேளையில் மின் நிறுத்தம் செய்ப்படுவதால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.அடிக்கடி மின் நிறுத்தம் ஏற்படுவதை தவிர்க்க மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement