Advertisement

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக வழக்கு - டில்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டில்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குஇன்று விசாரணைக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் ஆகிய அத்தியாவசிய எரிபொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில் “பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் உயர்த்தப்படுவதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் மறைமுக உத்தரவின்பேரில் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன. எனவே பெட்ரோலிய பொருட்கள் மீது நியாயமான அளவில் விலையை நிர்ணயிக்க உத்தரவிடவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீது இன்று(புதன்கிழமை) விசாரணை நடக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Ram - ottawa,கனடா

    நம் மக்களுக்கு பெட்ரோல் டீசல் வேண்டும் ஆனால் நம்மவூரில் தோண்ட விடமாட்டார்கள் , அப்பண்ணா வெளிநாட்டில் இருந்து தான் வாங்கணும், அவன் கொடுக்குற விலையில் தன வாங்கியாகணும் அப்ப அதற்குண்டான விலையை நாம் கொடுத்தாகணும்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இவர்கள் வழக்கை முடிக்கும் பொழுது லிட்டர் ஆயிரத்தை எட்டி இருக்கும்

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    .இதற்கு, கச்சா எண்­ணெய் ஏற்­று­மதி நாடு­களின் கூட்­ட­மைப்­பான ‘ஒபெக்’, கச்சா எண்­ணெய் உற்­பத்­தியை, நாள் ஒன்­றுக்கு, 18 லட்­சம் பேரல் குறைத்­தது என்­பதுதான் கார­ணம். அமெரிக்கா இந்த விலையுயர்வை வைத்து பலன் பெறுகிறது . வளைகுடா நண்பர்கள் இங்கு அரசைதிட்டுவதற்கு பதில் சுல்தான்களையும் அமீர்களையும் சந்தித்து உதவிகேட்கலாமே

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    இதுல பொதுமக்கள் எங்க பாதிக்கப்படுகிறார்கள். வாகனம் பயன்படுத்துபவர்கள் வெறும் 0.12 சதவீதம்தான். ஆடம்பரம் வேண்டும் என்றால் செலவு செய்துதான் ஆக வேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement