Advertisement

சிட்டி க்ரைம் செய்திகள்

மது விற்றவர்கள் கைது
மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் பீளமேடு போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்த, சதீஷ்குமார், 27, ஆறுமுகம், 47, ராமலிங்கம், 37, குணசேகரன், 55, பாக்யசெல்வம், 37 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

லாட்டரி விற்றவர் கைது
போத்தனுார் போலீசார் நேற்று முன்தினம், சாரதா மில் ரோட்டில் ரோந்து சென்றனர். அச்சமயம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்த, சுந்தராபுரத்தை சேர்ந்த சக்திமுருகன், 44 என்பவர் கைது செய்யப்பட்டார். விற்பனைக்கு வைத்திருந்த கேரளா மாநில லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொலை மிரட்டல்; கைது
நியூ சித்தாபுதுார், ஹரிபுரத்தை சேர்ந்த மதன்குமார் மனைவி தனபாக்யம், 36. இவரது வீட்டின் முன், நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த முருகன், 48 மற்றும் அவரது மகன்கள் விக்னேஷ், 27, தினேஷ், 27 ஆகியோர் கூச்சலிட்டனர். இதுகுறித்து கேள்வி கேட்ட தனபாக்கியத்தை மூன்று பேரும் அடித்து, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின்பேரில், காட்டூர் போலீசார்
வழக்கு பதிவு செய்து தந்தை மற்றும் மகன்களை கைது செய்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement