Advertisement

காவலர் வீட்டில் திருட்டு 20 சவரன், 'அபேஸ்'

செவ்வாப்பேட்டை:செவ்வாப்பேட்டை அருகே, தலைமை காவலர் வீட்டில், 20 சவரன் நகை, ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் 'டிவி' திருட்டு நடந்தது குறித்து, போலீசார் வழக்கு பதிந்து
விசாரிக்கின்றனர்.


செவ்வாப்பேட்டை அடுத்த, திருவூர் பகுதியைச் சேர்ந்தவர், ரவீந்திரன், 37. இவர், திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் கண்காணிப்பு பிரிவில், தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி மோகனவல்லி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இரு குழந்தைகள் உள்ளனர்.


கணவன், மனைவி இருவரும் பணிக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்பக்க இரும்பு கேட் கதவு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, 20 சவரன் தங்க நகை, ஒன்றரை லட்சம் ரூபாய் பணம், 'டிவி' மற்றும் லேப்டாப் ஆகியவை திருடப்பட்டது தெரிய வந்தது.


இது குறித்து, செவ்வாப்பேட்டை போலீசில், ரவீந்திரன் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement