Advertisement

நகராட்சி குடிநீர் வரவில்லை அதிகாரியிடம் மக்கள் புகார்

காஞ்சிபுரம்:பல மாதங்களாக, நகராட்சி குடிநீர் வரவில்லை என, அதிகாரியை சந்தித்து, பொதுமக்கள் புகார் அளித்தனர்.


காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள, நரசிங்கராயர் தெரு, ராஜகோபால் தெரு, மாண்டு கன்னீஸ்வரர் கோவில் ஒத்தவாடை தெரு ஆகிய பகுதிகளில், சில மாதங்களாக, முறையாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.இந்நிலையில் நேற்று, அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், நகராட்சி அலுவலகம் சென்று, அதிகாரியிடம் நேரடியாக புகார் தெரிவித்தனர்.


இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:எங்கள் பகுதிக்கு, சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்குவதில்லை. எந்த நேரம் தண்ணீர் வரும் என, தெரியவில்லை.சம்பந்தப்பட்டோரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தண்ணீர் கிடைக்காமல், வெளி இடங்களுக்கு சென்று, குடிநீர் பிடித்து வருகிறோம். கூலி தொழிலாளிகளான நாங்கள், வேலையை விட்டு, குடிநீர் தேடி அலைகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement