Advertisement

விளையாட்டு போட்டி: மாணவியருக்கு பரிசு

திருத்தணி:பல்வேறு விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள், திருத்தணி டி.எஸ்.பி., வழங்கினார்.


திருவள்ளூர் மாவட்டத்தில், இரு மாதங்களாக ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், திருத்தணி அரசினர் மகளிர் பள்ளியில் இருந்து, 200 மாணவியர், கபடி, கோகோ, வட்டு ஏரிதல், நீளம் தாண்டுதல் உட்பட பல்வேறு போட்டி களில் பங்கேற்றனர்.இதில்,வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, நேற்றுமுன்தினம், அரசு மகளிர் பள்ளி வளாகத்தில் நடந்தது.


பள்ளி தலைமை ஆசிரியை, டி.தெமினா கிரேனாப் தலைமை வகித்தார்.பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், எம்.சுரேஷ், வரவேற்றார்.விழாவில், திருத்தணி டி.எஸ்.பி., சேகர், இன்ஸ்பெக்டர் வினாயகம் ஆகியோர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு, சான்றுகள் மற்றும் கோப்பை வழங்கி, பாராட்டினர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement