Advertisement

வேலைவாய்ப்பு 14ல் முகாம்

திருவள்ளூர்:தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான, அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 14ம் தேதி, திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு, ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.


முகாமில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா படித்தவர்கள்
பங்கேற்கலாம். தகுதியுடையவர்கள், 14ம் தேதி காலை, 10:00 மணிக்கு, திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement