Advertisement

பூசாரியை தாக்கிய வாலிபர்களுக்கு வலை

வெள்ளவேடு:வெள்ளவேடு அருகே, கோவில் பூசாரியை தாக்கிய ஐந்து பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.
வெள்ளவேடு அடுத்த, திருமழிசையைச் சேர்ந்தவர் நாகராஜ், 41. இவர், அப்பகுதியில் இளங்காளியம்மன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, நாகராஜ் பணியை முடித்து, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, காந்தி தெரு பகுதியில் வந்தபோது, அவரை வழிமறித்த, குடிபோதையில் இருந்த, அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், 25, விக்கி, 18, நரேஷ், 25, வெங்கடேசன், 23, ரமேஷ், 32, ஆகியோர் கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில், படுகாயமடைந்த நாகராஜ், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளவேடு போலீசில் நாகராஜ் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement