Advertisement

போ லீ ஸ் டை ரி

விபத்தில் கொத்தனார் பலி


திருப்போரூர் அடுத்த, மானாமதி, ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வீரராகவன், 58; கொத்தனார். நேற்று காலை, 9:00 மணிக்கு, கட்டட பணிக்காக, மாமல்லபுரம், தேவனேரி பகுதியில், டி.வி.எஸ்., மொபெட்டில் சென்றார். வாணி என்ற பெண், உடன் சென்றார்.தேவனேரி சந்திப்பு குறுக்கே கடக்கும் போது, புதுச்சேரிக்கு சென்ற, 'ரெனால்ட் க்விட்' கார் மோதி, அங்கேயே வீரராகவன் இறந்தார். காயமடைந்த பெண், செங்கல்பட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


விபத்தில் வாலிபர் பலி


திண்டுக்கல், வேடசந்துார் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் ரமேஷ், 28; கல்பாக்கம் பகுதியில், வீட்டு உபயோக பொருட்களை, தவணை முறை விற்பனை செய்பவர். நேற்று முன்தினம் மாலை, வெங்கப்பாக்கத்திலிருந்து, இருசக்கர வாகனத்தில் புதுப்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தார்.எதிரே, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதுவது போல் வந்துள்ளது. இதில் தடுமாறிய ரமேஷ், கீழே விழுந்து காயமடைந்தார். செங்கல்பட்டு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த போது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது.


சாராயம் விற்ற மூவர் கைது

திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பதாக, திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி நேற்று, அப்பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.இதில், திருக்கழுக்குன்றம், தேசுமுகிப்பேட்டையைச் சேர்ந்த குப்பம்மாள், 63, டில்லிபாபு, 35, ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்கள் பதுக்கி வைத்திருந்த, 2,100 எரிசாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


அதே போல், திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு பிரிவு போலீசார், பரமசிவம் நகர், காந்தி தெருவை சேர்ந்த ரூபாவதி, 49, என்பவரையும் கைது செய்து, அவர் பதுக்கி வைத்திருந்த, 385 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement