Advertisement

50 மின் மோட்டார்கள் அதிகாரிகள் பறிமுதல்

வாலாஜாபாத்:முறைகேடாக தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்திய, 50 மின் மோட்டார்களை, பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான இடங்களில், மின் மோட்டார் அமைத்து, திருட்டுத்தனமாக தண்ணீர் உறிஞ்சுவதாக, பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர், மத்தியாஸ் தலைமையிலான ஊழியர்கள் நேற்று, வீடுகள் மற்றும் கடைகளில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


இதில், முறைகேடாக தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்திய, 50 மின் மோட்டார்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement