Advertisement

காஞ்சி நீதிமன்றத்தில் 'சிசிடிவி' கேமரா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகம் மற்றும் அலுவலகங்களில், 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


குற்றச் செயல்களை கண்காணிப்பதற்காக, பெரிய வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. பொதுமக்கள் அதிகம் வரும் நீதிமன்றத்திலும் கேமராக்கள் பொருத்த வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட நடுவர் நீதிமன்றம் எண் - 2ல், வளாகத்தில் உள்ள ஆறு நீதிமன்றங்களிலும், அலுவலகத்திலும், 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், நீதிமன்ற வளாகத்தில், தானியங்கி சுழலும் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.


இதனால், வளாகத்தில் எந்த நிகழ்வு நடந்தாலும் எளிதில் பார்க்க முடியும். அசம்பாவிதம், குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்க உதவியாக இருக்கும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement