Advertisement

சிற்பக்கலை விழிப்புணர்வு கண்காட்சி

மாமல்லபுரம்:கலை பண்பாட்டுத் துறை சார்பில், சிற்பக்கலை விழிப்புணர்வு கண்காட்சி, மாமல்லபுரத்தில்துவங்கியது.


மாமல்லபுரம், அரசு கட்டட மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரியில், மரபு கட்டட, சிற்ப, ஓவியக் கலைகள் பயின்று, கலைஞர்கள் ஏராளமாக உருவாகி உள்ளனர்.இவர்களை ஊக்கப்படுத்தி, பிறருக்கும், கலை விழிப்புணர்வு ஏற்படுத்த கருதி, தமிழக கலை மற்றும் பண்பாட்டுத் துறை, ஓவிய நுண்கலைக்குழு நிதியுதவி வழங்கி, தமிழகம் முழுவதும், ஆண்டுதோறும் சிறப்பு கண்காட்சி நடத்துகிறது.


மாமல்லபுரத்தில், பூம்புகார் விருது சிற்பக்கலைஞர் புண்ணியகோட்டி, சிற்பக்கலைஞர் ஆர்.கணேசன் மூலம், இத்துறை கற்சிற்ப கண்காட்சியை, அரசு சிற்பக்கல்லுாரி முதல்வர், ஜெ.ராசேந்திரன், நேற்று முன்தினம், துவக்கிவைத்தார். பல வகை சிற்பங்கள் இடம்பெற்றுள்ள கண்காட்சி, 20ம் தேதி வரை நடைபெறுகிறது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement