Advertisement

காஞ்சி நகராட்சி பள்ளியில் சுத்தம், சுகாதார கண்காட்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யாகசாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில், சுத்தம் மற்றும் சுகாதார கண்காட்சி நடந்தது.


மனித வள மேம்பாட்டுத் துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு பள்ளிகளில், செப்., 1 முதல், 15 வரை, துாய்மை பாரத நிகழ்ச்சி நடக்கிறது.அதன்படி, மாணவ - மாணவியரிடையே, சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்படுகிறது.
காஞ்சிபுரம் யாகசாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த, விழிப்புணர்வு கண்காட்சிக்கு, பள்ளி தலைமையாசிரியை டி.உஷாராணி தலைமை வகித்தார்.


இதில், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், திடக்கழிவு மேலாண்மை, கைகளை சுத்தமாக கழுவுவது, சுற்றுப்புறத்தை துாய்மையாக பேணுவது குறித்த கண்காட்சி மற்றும் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.கண்காட்சியை, பள்ளி ஆசிரியைகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.


மேலும், மாணவ - மாணவியருக்கு சுகாதாரம் குறித்த படம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கட்டுரை எழுதுதல், பேச்சுப் போட்டிகள் மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement