Advertisement

பட்டியல் இனம் வேண்டாம் சொல்கிறார் கிருஷ்ணசாமி

பரமக்குடி: பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
பரமக்குடி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கூறியதாவது:
ஆறு பிரிவுகளாக உள்ள பட்டியல் இனத்தவர்களை ஒரே இனமாக தேவேந்திர குல வேளாளர், என அறிவிக்க வேண்டும். தேவேந்திர குல மக்களை பட்டியல் இனத்தில் இருந்து நீக்கி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். பட்டியல் இனத்தில் இருந்து நாங்கள் வெளியேற உள்ளோம். அக்., 6 ல் திருச்சியில் மாநில மாநாடு நடத்த உள்ளோம், என்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இவர்சாதியைசேர்ந்த மற்றவர்களின் கருத்து தெரியாமல் எப்படி முடிவெடுப்பார்கள் எடஒதுக்கீட்டை அவ்வளவு எளிதாக யார் விட்டு கொடுப்பார்களா

  • Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா

    ரொம்ப நல்லது.... அப்படிஎன்ன்றால் நீங்கள் பொது தொகுதியில் நில்லுங்கள்

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    வேதப்படி நான்கு வர்ணங்களுக்குள் தீண்டாமையில்லை.. போரில் தோற்ற எதிரிப்படைகளையும் (நம்பிக்கையின்மையால்)அவர்களை சார்ந்தோரையும் ஊரைவிட்டு விலக்கிவைத்த வழக்கமே தீண்டாமை. மிகப் பெரும்பாலான சத்திரிய சமூகங்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒதுக்கிவைக்கப்பட்டது வரலாறு. நாம் எவ்வளவோ தேவலாம்.ஐரோப்பியர்கள் போரில் தோற்ற நாடோடி சமூகத்தவரை அடிமைகளாக ஏலம் விட்டனர்.

  • I love Bharatham - chennai,இந்தியா

    உளறல் இல்ல.... நல்ல உரத்த சிந்தனை ....அறிவு பூர்வமான பார்வை.... கட்டுகளை உடைத்தல் மட்டுமே மனித விடுதலை ......இட ஒதுக்கீடு என்ற கட்டை உடைத்தவர் என்று வரலாறு கூறும்

  • sathis_kk - Singapore,சிங்கப்பூர்

    என்ன உளறல் இது? அப்படி என்றால் உங்களுக்கு 18 % இட ஒதுக்கீடு வேண்டாமா ? எனக்கு ஒன்றும் புரியவில்லை ....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement