Advertisement

 மீட்கப்பட்ட பூங்கா இடங்களை பாதுகாக்க... கம்பி வேலி!  அரசு நிதி பெற்று வசதி ஏற்படுத்தவும் முடிவு




3br
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், ஆக்கிரமிப்பாளர்களிடம் மீட்கப்பட்ட பூங்காக்களில், கம்பி வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்ததும், அரசு நிதி பெற்று,
வசதிகள் ஏற்படுத்தி தர நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில், பொது ஒதுக்கீட்டு இடங்களான பூங்கா, சிறுவர் விளையாடும் இடம், சிறுவர் பள்ளி மற்றும் திறந்தவெளி பகுதிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.இவற்றை நகராட்சி நிர்வாகம் நிர்வகித்து வருகிறது.


கடந்த, 2011ல் திருவள்ளூர் ஜெயா நகர், வி.எம்.நகர், ராஜாஜிபுரம், என்.ஜி.ஓ., காலனி, எம்.ஜி.எம்., நகர், ஜவகர் நகர், விக்னேஷ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளில், 40 இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


72 பூங்கா இடங்கள்


மீட்கப்பட்ட பகுதிகளில், நகராட்சிக்கு சொந்தமான இடம் என, பெயர் பலகை வைக்கப்பட்டது. இதே போல், சில ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த பூங்கா இடங்களும் மீட்கப்பட்டன. இவ்வாறு, நகராட்சி பகுதிகளில், 72 பூங்கா இடங்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் நகராட்சிக்கு வைத்த கோரிக்கை:
மீட்கப்பட்ட பூங்கா இடங்களில், மீண்டும் ஆக்கிரமிப்புகள் அரங்கேறுகின்றன. இது, அதிகாரிகளின் அலட்சியத்தையும், திணறலையும் தான் காட்டுகிறது. பூங்கா பகுதிக்கு, உடனடியாக
தடுப்பு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கோரி வந்தனர்.


இதையடுத்து நகராட்சி நிர்வாகம், பூங்கா இடங்களான, 72 இடங்களிலும், கம்பி வேலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களைச் சுற்றிலும் சிமென்ட் துாண் அமைக்கப்பட்டு, சுற்றிலும், கம்பி வேலை அமைக்கப்படுகிறது.


நடை பயிற்சி


இப்பணி இம்மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.அதே சமயம், கம்பி வேலி மட்டும் அமைப்பதோடு நின்று விடாமல், சிறுவர்கள், விளையாடவும், பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


நிதி வழங்க கோரிக்கை


திருவள்ளூர் நகராட்சியில், என்.ஜி.ஓ., காலனி, புங்கத்துார் மற்றும் நேதாஜி சாலை ராஜம்பாள் தேவி பூங்கா மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. மீட்கப்பட்ட, 72 பூங்கா இடங்களிலும் கம்பி வேலை அமைக்கும் பணி நடக்கிறது. பின், அரசு நிதி பெற்று, பூங்காக்களில் படிப்படியாக வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும். ராஜம்பாள் தேவி பூங்காவில், சிறுவர் விளையாடவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதி ஏற்படுத்தி தரப்படும்.

சு.முருகேசன்


நகராட்சி ஆணையர், திருவள்ளூர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement