Advertisement

அமலுக்கு வந்தது 'எய்ட்ஸ்' சட்டம்

புதுடில்லி : 'எய்ட்ஸ்' நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சம உரிமை அளிக்கும் வகையிலான புதிய சட்டம், அமலுக்கு வந்தது.


எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ உதவி, வீடு வாடகைக்கு தருவது போன்றவற்றில் பாகுபாடு காட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டனர். அதை தடுக்கும் வகையில், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு, ஏப்., 20ல் இதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.


இந்நிலையில், இந்த சட்டம் நேற்று முன்தினம் முதல், அமலுக்கு வந்தது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோருக்கு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது. அவ்வாறு பாகுபாடு காட்டுவது குற்றமாக கருதப்படும்.


இந்த சட்டத்தை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட ஒரு பொது நலன் வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. 'சட்டம் நிறைவேற்றுவீர்கள்; ஆனால் அதை அமல்படுத்த மாட்டீர்களா?' என, உயர் நீதிமன்றம், அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • saravanan - basra,ஈராக்

    அப்படியே இட ஒதுக்கீடும் கொடுங்க விளங்கிடும் நாடும் நாட்டுமக்களும்

  • R Sanjay - Chennai,இந்தியா

    வரவேற்கவேண்டிய சட்டம் வாழ்த்துக்கள்

  • s t rajan - chennai,இந்தியா

    ஆமா.... ஆண்-ஆண், ஆண்-பெண் யாரும் எப்படி வேணும்னா வாழலாமுன்னு சொல்லியாச்சு. அப்ப எங்கும் எய்ட்ஸ் தான். அப்புறம் இட ஒதுக்கீடு தானே அடுத்தது. பாரத தேசம் வாழ்க வாழ்கவே. .

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    எய்ட்ஸ்' நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சம உரிமை அளிக்கும் வகையிலான புதிய சட்டம், அமலுக்கு வந்தது... இதை விட இது வர காரணமான சிவப்பு விளக்கு பகுதிகளை மூடலாமே

  • ஆப்பு -

    அதிலேயும் மேல் சாதி எய்ட்ஸ், கீழ்சாதி எய்ட்ஸ்னு சமூக நீதிக் கொள்கை உண்டா எசமான்?

    • G.BABU - HARROW

      ஆப்பு, இதிலுமா உமது குசும்பு .....ஆனாலும் தேவையான கேள்விதான். பொதுவாக ஒதுக்கீடு என்பதே எய்ட்ஸ் ,...புற்றுநோயைவிட அபாயகரமானது.

    • skv(srinivasankrishnaveni) - Bangalore

      அவரு சொல்றது உண்மைதானுங்கோ இவனெல்லாம் ஏக பத்தினி விரதநா இருக்கானுக கஸ்மாலம் மாதிரி கண்டைசடத்துக்கும் போவது கண்டபடி துன்றது குடிப்பது வீட்டுலே இருக்கும் மனைவிமக்களை அடிப்பது இன்று சர்வ சகஜம் ஆனால் வெரைட்டிங் தேடிப்போய் நோய்வாங்கிண்டுவந்தால் எவ பொறுப்பா

  • ஆப்பு -

    சரி...மத்த எல்லோரும் படிச்சுட்டு வேலை வெட்டி இல்லாம திண்டாடற மாதிரி எய்ட்ஸ் நோயாளிகளும் திண்டாடட்டும்னு சட்டம் போட்டிருக்காங்க.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement