Advertisement

'கணேஷ் தர்ஷன் - 2018' கைவினை கண்காட்சி

சென்னை:தமிழ்நாடு கைவினை பொருட்கள் கலைஞர்கள் நல சங்கமான, 'சிருஷ்டி'
சார்பில், சென்னை, ஆழ்வார்பேட்டையில், 'கணேஷ் தர்ஷன் - 2018' கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சி துவங்கப்பட்டு உள்ளது.


பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன், கண்காட்சியை துவக்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில், மத்திய ஜவுளி துறை மண்டல இயக்குனர், பி.மல்லிகார்ஜுனையா பங்கேற்றார்.
வரும், 16ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், அனைத்து வகை கைவினை பொருட்களும் இடம்பெறும். பல வகை விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. அனைத்து பொருட்களுக்கும், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


இது குறித்து, சங்க செயலர், எல்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''18 ஆண்டுகளாக, சிருஷ்டி, கைவினை கலைஞர்களின் மேம்பாட்டிற்கு பாடுபட்டு வருகிறது. கைவினை பொருட்கள் மீதான, ஜி.எஸ்.டி., வரி விதிப்பை, மறு ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement