Advertisement

மழை முன்னெச்சரிக்கை பணி மின் வாரிய தலைவர் ஆய்வு

சென்னை:மழைக்கால முன்னெச்சரிக்கை பணி தொடர்பாக, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன், மின் வாரிய தலைவர் விக்ரம் கபூர், ஆய்வு மேற்கொண்டார்.


சென்னை வடக்கு, தெற்கு உள்ளிட்ட, ஒன்பது மண்டலங்களாக, மின் வாரியம் செயல்படு
கிறது. இவை, தலா, ஒரு தலைமை பொறியாளரின் கீழ் இயங்குகிறது.அடுத்த மாதம், வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், கீழே தொங்கும் மின் கம்பியை இழுத்து கட்டுவது, சேதமடைந்த மின் சாதனங்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை, மின் வாரியம் முடுக்கி விட்டுள்ளது. அவை, பல இடங்களில் கண் துடைப்பிற்காக நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.


இந்நிலையில், சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், தலைவர் விக்ரம் கபூர், அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன், முன்னெச்சரிக்கை பணி தொடர்பாக ஆய்வு செய்தார்.


மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளின் விபரத்தை, மின் வாரிய தலைவர், விரிவாக கேட்டறிந்தார். மழையின் போது, மின் விபத்து ஏற்பட்டால், அதற்கு காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement