Advertisement

போலீஸ் டைரி

கஞ்சா வியாபாரிகள் நால்வர் கைது

நீலாங்கரை, கற்பக விநாயகர் நகரில், நேற்று காலை, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு கஞ்சா விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த முரளி, 28, உட்பட மூவரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

* தரமணி, எஸ்.ஆர்.பி., டூல்ஸ் சந்திப்பில், நேற்று காலை கஞ்சா விற்ற, கண்ணகி நகரைச் சேர்ந்த சுப்ரமணி, 64, என்பவனை, கைது செய்த போலீசார், 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.


'பைக்' திருடர்கள் இரண்டு பேர் கைது


நீலாங்கரையில் உள்ள தனியார் உணவகத்தில், நேற்று முன்தினம் இரவு, இரண்டு பேர் சுவர் ஏறி குதித்துள்ளனர். பின், அங்கு நின்றிருந்த, இரண்டு இருசக்கர வாகனங்களை திருட முயன்றனர்.
இதை பார்த்து தடுக்க முயன்ற காவலாளியை தாக்கி, தப்பி சென்றனர். நீலாங்கரை போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 20, உட்பட இருவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement