Advertisement

விநாயகர் சன்னதி நாளை கும்பாபிேஷகம்

மாடம்பாக்கம்:மாடம்பாக்கம், மதுரா நுாத்தஞ்சேரியில் உள்ள, தேவி கருமாரி அம்மன் கோவிலின், விநாயகர் சன்னதிக்கு, நாளை, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


தாம்பரம் அடுத்த, மாடம்பாக்கம் அருகே உள்ள, மதுரா நுாத்தஞ்சேரி கிராமத்தில் உள்ள, தேவி கருமாரி அம்மன் கோவிலில், நுாதன ஜோதி வலம்புரி விநாயகர் சன்னதி, புதிதாக
நிறுவப்பட்டது.இதையொட்டி, இன்று மாலை, விநாயகர் பூஜை, கலச பிரதிஷ்டை பூஜை ஆகியவை நடக்க உள்ளன.


நாளை அதிகாலை, விநாயகர் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, அம்மனுக்கு கலசாபிஷேகம் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக கமிட்டி தலைவர், கோவிந்தன், துணை தலைவர் தேவேந்திரன், செயலர் மணி ஆகியோர் செய்து வருகின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement