Advertisement

கருணாநிதி அழைத்தும் செல்லவில்லை: ஆதரவாளர்களிடம் அழகிரி தகவல்

மதுரை : 'தி.மு.க., தலைவர் கருணாநிதி இருந்தபோது கட்சியில் சேர அழைத்தும் நான் செல்லவில்லை' என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அவரது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.


கருணாநிதி மறைவிற்கு பின் அவரது நினைவாக சென்னையில் பேரணியை அழகிரி நடத்தினார். நேற்று முன்தினம் அவர் மதுரை திரும்பினார். மாவட்டம் வாரியாக ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். நேற்று தேனி மாவட்டத்தினரை சந்தித்தார். உடன் முன்னாள் துணை மேயர் மன்னன், இசக்கிமுத்து உள்ளிட்டோர் இருந்தனர்.சந்திப்பின்போது ஆதரவாளர்கள் பேசியதாவது: மாவட்டம் வாரியாக தி.மு.க., அதிருப்தி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் சுற்றுப்பயணம் செய்தால் உண்மை நிலை தெரியும். உங்கள் பின் வருவதற்கு தயாராக உள்ளனர். கருணாநிதி பெயரில் பெரிய இயக்கம் துவங்கி, கட்சியில் நம்மை மீண்டும் சேர்க்க வைக்கும் அளவிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தினர்.


அவர்களிடம் அழகிரி பேசியதாவது: கட்சியில் சேர்க்க அவர்கள் தயாராக இல்லை. கருணாநிதி இருந்தபோது அவரை அடிக்கடி பார்க்க செல்வேன். 2016 சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து அவரிடம் அதிருப்தி தெரிவித்தேன்.
அப்போது, 'இவர்கள் நிர்வாகம் தெரியாதவர்களாக உள்ளனர். உனக்கான நேரம் வரும். அப்போது வா. தோல்வியுற்ற பின் அவர்களே உன்னை தேடி வருவார்கள். அதுவரை காத்திரு' என தெரிவித்தார். அப்போதுதான், 'கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை' என நான் வெளிப்படையாக தெரிவித்தேன்.கடைசி நேரத்தில் கருணாநிதியின் உடல்நலம் கருதி எவ்வித நிர்பந்தமும் கொடுக்காமல் அமைதி காத்தேன். கருணாநிதி அழைத்தும் செல்லாமல் இருந்து விட்டேன். மாவட்டம் வாரியாக ஆதரவாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள், என்றார்.


நிருபர்களிடம் அழகிரி கூறுகையில், ''பேரணி வெற்றிக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், திருப்பரங்குன்றம். திருவாரூர் தொகுதிகள் இடைத்தேர்தல் குறித்தும் ஆதரவாளர்கள் ஆலோசனைகள் தெரிவித்தனர். மாவட்ட வாரியாக ஆதரவாளர்களை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து (42)

 • ganapati sb - coimbatore,இந்தியா

  திமுகவுக்கு கருணாநிதி இருக்கும் போதே எப்போதுமே 20% மேல் வாக்கு வங்கி இல்லை 80 % தமிழக மக்கள் நாத்திகத்திற்கு ஒத்து ஊதிய ஊழலுக்கு அடித்தளம் அமைத்த திமுகவிற்கு எதிரான மன நிலையில்தான் உள்ளனர் எப்போதுமே பல சாதி மத தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைத்தே அது 30 % வாக்கு வங்கி பெற்ற ஜெய இருந்த அதிமுகவை வென்று வந்துள்ளது 15 % வாக்கு மற்ற சிறு குறு கட்சிகளிடம் உள்ளது . மீதமுள்ள 35 % யாருக்கும் வாக்களிக்காத நடுநிலை வாக்காளர்கள் ஒரு நல்ல அரசியல் மாற்றத்திற்காக முனைந்து யாருக்கேனும் வாக்களித்தால் அவர்கள் ஜெயிப்பார்கள் . ஸ்டாலின் மேயராக உள்ளாட்சி அமைச்சராக ஓரளவு நன்றாக செயல்பட்டிருந்தாலும் கூட தனிப்பட்ட முறையில் வெற்றிபெறும் அளவு செல்வாக்கை பெறவில்லை . அழகிரிகோ தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு தவறாமல் உதவி கணிசமான தென்மாவட்ட மக்களிடம் நல்லபெயர் தனிப்பட்ட உள்ளது. அவரால் நிரூபித்து வேட்பாளர்களை நிறுத்தி திமுகவின் வெற்றி வாய்ப்பை சில ஆயிரம் வாக்கு வித்தியாசங்களில் நழுவ வைக்க முடியும் . மக்கள் விரும்பும் சரியான கூட்டணி ஒன்றை அமைக்கவிட்டால் அதிமுக பிளவு பட்டிருந்தாலும் திமுகவிற்கு RK நகர் போல மோசமாக இல்லாவிட்டாலும் மீண்டும் தோல்வி உறுதி .

 • unmai -

  kattumaram sonnalum sollirupaan!!

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  அழகிரி இனி என்னவெல்லாம் சொல்வாரோ???

 • karthi - chennai,இந்தியா

  அழகிரியை திமுகவினர் மட்டுமல்ல, பொதுமக்களும் விரும்பவில்லை. அவரை ரவுடி என்றே பெரும்பாலோர் கூறுகிறார்கள். மக்களிடம் ரொம்ப கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார் என்று தோன்றுகிறது. அவரை திமுகவில் சேர்த்தால், திமுகவில் பல பிரச்சினைகள் உருவாகும். அதனால் அவரை எக்காரணம் கொண்டும் திமுகவில் சேர்க்க கூடாது என்பது தான் தொண்டர்கள் அனைவரின் கோரிக்கையும் ஆகும்.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  அழகிரி கட்சியிலிருந்து மட்டுமா குடும்ப சொத்திலிருந்து நீக்க முடியாது. முதல் மகன் அழகிரி எனவே மூத்தமகனுக்கே முழு உரிமை உள்ளது எனவே குடும்ப குட்டியின் வாரிசு அஞ்சாநெஞ்சன் அழகிரியே ஸ்டாலின் அல்ல

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  நேற்று தான் ஒரு வாசகர் சொன்னார், அழகிரி செய்தியை காணோமே என்று. இதோ போட்டுவிட்டார்கள். கலைஞர் அழைத்தாராம் ஆனால் இவர் செல்லவில்லையாம். ஏன் செல்லவில்லை? இவரைக் கட்சியில் இருந்து நீக்கியது கலைஞரின் முடிவு. அப்புறம் எதுக்கு அவரே அழைக்கப் போகிறார்? ஆஹா கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேப்பாருக்கு புத்தியில்லையா என்ன என்பார்களே அது மாதிரி இருக்கிறது. ஆனால் இங்கே பல திடீர் அழகிரி ஆதரவாளர்கள் சங்கம் வந்து சுடலை கட்டுமரம் என்று கூவும். செம காமெடியா இருக்கும்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் தள்ளி விட்டுட்டாங்க திரும்ப இந்த சீசன்ல உள்ள போக முடியாது. அந்த குடும்பமும் குறிப்பிட்ட நாளுக்கு மேல தங்காது. பட்டத்தை வேணாம் வைச்சுக்கலாம், ஆனா இடத்தை காலி பண்ணித்தான் ஆகணும். தொண்டனுங்க சுய புத்தியோட இருந்தா, அடுத்த சீசன்ல வேற குடும்பத்தை உள்ளெ தள்ளலாம். உங்களுக்கு வேணா, வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்க சொல்லி கேட்டு பார்க்கலாம்..

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  இப்பவும் சொல்கிறேன் கூட்டணி இன்றி அழகிரி இல்லாமல் தேர்தலை தி.மு.க சந்தித்தால் குறைந்தது 100 முதல் 150 தொகுதிகள் வரை டெபாசிட் காலி.நிற்க தைரியம் இருக்கா?

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  திரு சுப்பிரமணியம் அவர்களே உங்க கோமாளிதானே பாராளுமன்ற தேர்தலின் போது இருந்தார் 40ம் காலி. ஆர்.கே நகரில் டெபாசிட் காலி இதுக்கு உங்க மொழியில் என்ன பெயர்.

 • துயில் விரும்பி - coimbatore,இந்தியா

  ஜேஜே இறந்த பின்பு எப்படி அதிமுக கூட்டத்தின் திறமை அம்புலமானதோ இப்போ திமுக கூட்டத்தில் திறமைகள் வெளிப்படும்.

 • tamil - coonoor,இந்தியா

  அழையா விருந்தாளியாக எதற்கு இவர் அலைய வேண்டும், இவரை யாரும் கட்சியில் கண்டுகொள்ளவில்லை, பிடிக்காத இடத்தில சேர ஆசைப்படுவதை விட, ஏதோ ஒரு இயக்கத்தை ஆரம்பித்து தனியாக இயங்கவேண்டும், அது தான் நல்லது

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  இங்கே வரும் நியூஸ் மற்றும் அதற்கு (இப்போதைக்கு) பாஜக அடிமைகள் போடும் கருத்தை எல்லாம் அழகிரி மட்டும் படிச்சு பார்த்தாருன்னா..... நாம் இவ்ளோ பெரிய தெறமைசாலியான்னு ஷாக்கடிச்ச மாதிரி ஆகிடுவாப்ல.... இந்த மாதிரி செஞ்சி ஒருத்தரை டில்லிக்கு அனுப்பி பாடா பட்டும் புத்தியில் ஏறலைன்னா என்னத்த சொல்ல...???

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அஞ்சாநெஞ்சன் கைப்புள்ள லெவலுக்கு இறங்கிட்டாரே அய்யோ பாவம் . சாதி ஆணவத்தின் ஆட்டத்தை அடக்குவது எளிதல்ல அஞ்சாநெஞ்சரே சாதியொழிப்பெல்லாம் வெறும் ஊருக்கு உபதேசம் என்பது இன்னுமா புரியவில்லை ?. தலித் மட்டுமல்ல தலித்தை மணந்தவரையும் இங்கு அரசியலில் தீண்டத்தகாதவராகத் தான் நினைக்கும் நிலைமை மாறவில்லை

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  அழகிரி சொல்வது உண்மைதான். கருணாநிதி தனது அரசியல் வாரிசாக கனிமொழி வருவதையே விரும்பினார். தனது மொழி, இலக்கியம், கவிதை, பேச்சாற்றல் எல்லாம் கனிமொழிக்கு ஓரளவு உண்டு என நம்பிக்கை கொண்டார். ஆனால் இதில் எதுமே ஸ்டாலினுக்கு இல்லை என்பது அவருக்கு தெரியும். இவரால் தான் 2016ல் ஆட்சிக்கு வர முடியவில்லை என்று அனைவருக்கும் தெரியும். 2011ல் விஜயகாந்த்க்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருந்தால் தி.மு.க ஆட்சியில் வந்திருக்கும் தனது பெயர் மறைத்து விடும் என தடுத்ததும் இந்த கோமாளி ஸ்டாலின் என்பதையும் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கருணாநிதி கூறி வருத்தப்பட்டாராம்

 • Muruga Vel - Chennai,இந்தியா

  சிரிக்காம சொன்னாரா ...

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  'இப்ப என்ன செவீங்க?'முக பாணியிலேயே இவர் இனிமேல் ,இறந்தவர்களை கனவிலும் கூட வந்ததாக சொல்லலாம். ஸ்டாலின் பாடு திண்டாட்டம்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  அழகிரி தாழ்த்தப்பட்ட இனத்தில் கட்டியது அட்டக்கத்தி குடும்பத்திற்கு பிடிக்க வில்லை.... திமுகவிலுள்ள ஆதிக்க சாதியினருக்கும் அழகிரியின் தலைமையை ஏற்க தயக்கம்..... சாதி வெறி பிடித்த ஓசிச்சோறும் தலித்துகளை புறக்கணிக்கும் இந்த திட்டமிட்ட சதியில் முக்கிய குற்றவாளி.....

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வாவ்... கக திமுக... சீக்கிரம் உதயமானால் சுடலையின் அரசியல் வருங்காலம் கேள்விக்குறி... அறக்கட்டளையில் பங்கு கேட்கவேண்டும்... இல்லை என்றால் சூடு பிடிக்காது...

 • mindum vasantham - madurai,இந்தியா

  பிஜேபி 10 (7 + அழகிரி (மதுரை ) + கிருஷ்ணசாமி (தென்காசி ) + tr இல்ல sarath kumar ( thamarayil ) aathimuka ( 20 சீட் ),ரஜினி katchi இல்ல pmk இல்ல கேப்டன் 7 சீட் kongu matrum uthiri (2 சீட்) பழமை வேட்பாளர்கள் தான் தமிழகம் முழுவதும் கோவை வானதி ,தென் சேன்னை ராஜா ,காஞ்சிபுரம் தமிழிசை , மதுரை அழகிரி அல்லது தயா அழகிரி ,திருச்சியில் ரஜினி ,விழுப்புரத்தில் விஜயகாந்த் ,கரூரில் தம்பிதுரை என்று நட்சத்திர பட்டாளம் இறங்கணும்

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  அழகிரியின் ஆதரவாளர்கள் பி ஜே பி யும் அ தி மு க வும் தான் தி மு க வ கொள்கையால் எதிர்க்க முடியாது அவர்களால், அதான் அழகிரியை வெச்சு எதாவது டிரை பண்ணி பாக்குறாங்க

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  கண் கெட்ட பிறகு சூர்யா நமஸ்காரம் செய்து பயனென்ன? இப்போது சேத்துக்க வில்லை என்றால், என்ன உங்களால் செய்ய முடியும்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement