Advertisement

குடிநீர் - கழிவுநீர் வரி செலுத்த வேண்டுகோள்

சென்னை:குடிநீர் - கழிவுநீர் வரியை, 30ம் தேதிக்குள் செலுத்த, நுகர்வோருக்கு, குடிநீர் வாரியம்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இது குறித்து, குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த தவறிய நுகர்வோர் வீடு மற்றும் வணிக நிறுவனங்களின், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பைத் துண்டிக்க, சென்னை குடிநீர் வாரியத்திற்கு அதிகாரம் உள்ளது.நுகர்வோர், வரி மற்றும் கட்டணத்தை, சென்னைக் குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகம், பகுதி அலுவலகம் அல்லது பணிமனை வசூல் மையத்தில் செலுத்தலாம்.

மேலும், இணையதளத்தின் வாயிலாக, வாரியத்தின் வலைதள முகவரி, www.chennaimetrowater.tn.nic.in மூலமாகவும் செலுத்தலாம்.காலதாமதமாக செலுத்தப்படும் கட்டணங்களுக்கு, 1.25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும், குடிநீர் - கழிவுநீர் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.


மேலும், குடிநீர் - கழிவுநீர் இணைப்பு பெறாமல் இருந்தாலும், அதற்கான வரி செலுத்த வேண்டும்.எனவே நுகர்வோர், உரிய காலக்கெடுவுக்குள் கட்டணம் மற்றும் வரியை, உடனடியாக செலுத்தி, இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கையை தவிர்க்கவும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement