Advertisement

கூலி வேலைக்கு செல்லும் மருத்துவ மாணவி

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லுாரி மாணவி ஒருவர், கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக, விடுமுறை நாட்களில், கூலி வேலைக்கு செல்கிறார்.
பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமணி - -மல்லிகா தம்பதியின் மகள் கனிமொழி, 21. பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர், 2014ம் ஆண்டு, ப்ளஸ் 2 தேர்வில், 1,127 மதிப்பெண் பெற்றார். 191.05, 'கட் ஆப்' பெற்ற கனிமொழிக்கு, இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு கிடைத்தது. டாக்டர் கனவில் இருந்த கனிமொழிக்கு படிப்பை தொடர முடியாமல், வறுமை தடைக் கல்லானது. கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியாமல் திணறினார்.
கனிமொழியின் நிலையை அறிந்த, பெரம்பலுாரின் அப்போதைய கலெக்டர் தாரேஷ்அஹமது, சலுகை கட்டணத்தில் பஸ் பாஸ் வழங்கி உதவினார். மாணவியின் தந்தை பிச்சைமணி, கூலி வேலைக்கு சென்றும், கடன் வாங்கியும், மகளின் படிப்புக்கு, கட்டணம் செலுத்தி வருகிறார்.
இருப்பினும், மாணவி கனிமொழி, விடுமுறை நாட்களில், விவசாய கூலி வேலைகளுக்கு சென்று வருகிறார். இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், மருத்துவ படிப்பை தொடர முடியுமா... என்ற கவலை, கனிமொழிக்கு ஏற்பட்டுள்ளது.அவர் கூறியதாவது: வரும் பிப்ரவரி மாதம், இறுதித் தேர்வு நடக்க உள்ள நிலையில், கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணங்களை செலுத்த முடியாமல் சிரமப்படுகிறேன். எப்படியாவது டாக்டராகி, மக்களுக்கு சேவை ஆற்றுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.கனிமொழியின் மருத்துவ கனவுக்கு உதவ விரும்புவோர், 95247- 05879 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ

  இவ்வளவு மதிப்பெண் எடுத்த ஒரு ஏழை மாணவிக்கு ஏன் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கொடுக்கவில்லை. அரசு மக்களுக்காகவா அல்லது தனியார் மருத்துவ கல்லூரி முதலாளிகளுக்காகவா? பெற்றோரின் வருமானத்தை வைத்தும் இட ஒதுக்கீட்டு செய்ய வேண்டும். அரசு உதவித்தொகை வழங்கவேண்டும். அப்போதுதான் ஏழை மாணவர்களின் கனவு நிஜமாகும். இந்த மாணவியை போன்று எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவேண்டியது அரசின் கடமை.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  மையம் தத்து எடுத்து கமலஹாசன் நேரடியாக அழைத்து உதவி செய்துவிட்டார் இனி இப்பெண்மணி டாக்டரே ...

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  நானும் பல தடவை சொல்லியாகி விட்டது இந்த கருத்து மன்றத்தில், தனியாக இது எந்த அளவுக்கு உண்மை என்று உதவி செய்திட நினைக்கும் பலருக்கு தெரிவதில்லை. ஆகவே தினமலர் இந்த மாதிரி நிஜமாகவே படிக்க பணக்கஷ்டத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவவேண்டும் என்றால் ஒரு "தினமலர் குழந்தைகள் படிப்பு உதவி அக்கௌன்ட்" தொடங்கி அந்த அக்கௌன்ட் விவரம் தெரிவித்தால் உதவி செய்ய எண்ணம் கொண்ட அனைவரும் (உள்மாநிலம், வெளிமாநிலம், வெளிநாடு) அந்த அக்கவுண்டுக்கு எளிதாக பண பரிமாற்றம் செய்ய வசதியாக இருக்கும். உதவி தேவைப்பட்டவர்கள் தினமலரை நேராக தொடர்பு கொள்ளலாம் அல்லவோ இப்படி செய்தால்.

 • tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ

  வேலை செய்து படித்தல் ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. இதில் என்ன தவறு.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   இப்படி உண்மை பேசினா ஆபத்து ..... பணத்திமிர்ல பேசுறதா ஏசுவாய்ங்க .....

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  //அப்போதைய கலெக்டர் தாரேஷ்அஹமது, சலுகை கட்டணத்தில் பஸ் பாஸ் வழங்கி உதவினார்// - ஆஹா.. என்ன ஒரு கர்ண பிரபு.

 • chails ahamad - doha,கத்தார்

  உதவும் உள்ளங்கள் ஆயிரம் உண்டு வங்கி கணக்கு எண் பிரசுரித்தால் உதவிட வசதியாக இருந்திடும் .

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   பதிவு செய்துள்ள அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு கேட்டாலும் வங்கி எண் பலரிடம் இல்லவே இல்லை. வெளிநாட்டில் இருந்து உதவும் அன்பர்களுக்கு உதவும் எண்ணம் இருந்தாலும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

  • Raja Selvan - thiruvannamalai ,இந்தியா

   சமூகவலைத்தளங்களில் கிடைத்த தகவல் இதோ உங்களுக்காக NAME: Kanimozhi, SBI acc no: 37136757510, Branch: Perambalur, IFSC code: SBIN0000769. உதவி செய்யும் நல்ல உள்ளங்கள் தீர விசாரித்து பிறகு பணத்தை அனுப்பலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement