Advertisement

குள்ள பெண்ணுக்கு பிரசவம் : அரசு டாக்டர்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை: மரபணு கோளாறால், உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், குப்பந்தாங்கலைச் சேர்ந்தவர் மாரியப்பன், 32. இவரது மனைவி உமா மகேஸ்வரி, 29, 'அக்னொட்ரோபில்சியா' எனப்படும் மரபணு கோளாறால், எலும்பு வளர்ச்சியின்றி, உயரம் குறைந்து பிறந்தவர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டால், பிரசவத்தின் போது, தாய், சேய் இருவரில், ஒருவரைத் தான் காப்பாற்ற முடியும்.
இந்நிலையில், கருவுற்ற உமா மகேஸ்வரி, மூச்சு திணறலால், ஆக., 20ல், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர் பரிசோதனைக்குப் பின், செப்., 4ல், மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம், 2.3 கிலோ எடையுள்ள
ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
குழந்தைக்கு, அருண்சுந்தர் என பெயர் சூட்டி, உமா மகேஸ்வரிக்கு,
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், வீடு கட்டுவதற்கான ஆணையை, கலெக்டர் வழங்கினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement