Advertisement

'கொலையாளிகளை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை'

புதுடில்லி : 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக கவர்னர், தானாக முடிவெடுக்க முடியாது. மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிப்பது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் கருணை மனு மீது, கவர்னர் முடிவெடுக்க வேண்டும்' என, சமீபத்தில் கூறியது.இதைத் தொடர்ந்து, 'ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அது தொடர்பாக, கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.


இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது: மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை, முன்னதாகவே விடுவிப்பது அல்லது தண்டனையைக் குறைப்பது குறித்து, மத்திய அரசின் கருத்தை கேட்க வேண்டும்.


ராஜிவ் கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரித்துள்ளதால், மத்திய அரசின் கருத்தை, கவர்னர் கேட்க வேண்டும். ராஜிவ் கொலைக்கான சதி திட்டம் குறித்து, சி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகள் அடங்கிய விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.


'இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு நாடுகளிடம் உதவிகளை கேட்டுள்ளதால்,
இந்த வழக்கு தற்போதும் விசாரணையில் உள்ளது' என, அந்தக் குழு, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்துள்ளது.


ராஜிவ் கொலையாளிகளை விடுவித்தால், அது தவறான முன்னுதாரணமாக மாறி விடும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக கவர்னர் தானாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. மத்திய அரசின் ஆலோசனைகளை பெற வேண்டிய கட்டாயம், அவருக்கு உள்ளது. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (74)

 • LION Bala - Tuticorin,இந்தியா

  ஒரு நாட்டின் பிரதமர் மற்றும் 14 பேரை கொலை செய்தவர்களை விடுதலை செய்வது தவறான முன் உத்தாரணமாகிவிடும். ராஜீவ் கொலையில், கொலை செய்ய திட்டம் தீட்டியவர்கள் கொலை செய்ய தூண்டியவர்கள் கொலை செய்ய உதவியவர்கள் என மூன்று வகை உண்டு. இவர்கள் கொலை செய்ய உதவியவர்கள் அதற்க்கு கைக்கூலி வாங்கி கொண்டு தான் இந்த பாதக செயலுக்கு உடந்தையாக செயல்பட்டார்கள் என்பது மறுக்க முடியாது. அற்புதம்மாள் மகனின் மேல் உள்ள பாசம், நளினிக்கு மகளின் திருமணம் நடக்க வேண்டும் என்பது தற்போது உள்ள நிலைமை. 14 பேர் இறந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இப்படி பாதிக்கப்பட்ட குடுப்பதின் வலிக்கு அரசு என்ன செய்ய போகிறது. சதி திட்டம் நாடு கடந்த அளவில் நடந்துள்ளது. ஆக இந்த 7 பேரின் முடிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரின் ஒருமித்த கருத்துக்களையம் கேட்க வேண்டும். தமிழக அரசியல் காட்சிகள் அனைத்தும் தங்களின் சுய லாபத்திற்காக அறிக்கை விடுகின்றனர். குற்றம் செய்தவர்களை விடுவிக்க கூடாது என்பது இங்கே பலரின் கருத்து. அப்படி இவர்களை கருணை அடிப்படையில் விடுவித்தாலும் கடவுளின் தீர்ப்பு ஒன்று உண்டு என்பதை மறுக்க முடியாது.

 • Saravanan - Pazhani ,இந்தியா

  உச்ச நீதிமன்றம் சொன்னதுதான் இறுதியானது , பிறகு எதற்கு இந்த வழக்கை இழுத்தடிக்கிறார்கள் ?// பாய் (In 1985, the Supreme Court of India ruled in favour of Muslim divorcee Shah Bano, declaring that her husband should give her alimony. ). அப்போ KhanCross கட்சி சட்டத்தை மாற்றியது ஞாபகம் வரலையா ?

 • Muruganandam - Madras,இந்தியா

  அந்த ஏழு பேர்களும் திராவிடர்கள். ஆரியர்கள் இல்லை. இருந்திருந்தால் எல்லோரும் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று கூப்பாடு போடுவார்கள்.

  • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

   ப சிதம்பரம், திருநாவுக்கரசு, பீட்டர், வசந்த், புதுவை நாராயணசாமி ஆகியோரிடம் கேளுங்கள்.அவர்களும் விடுதலை செய்ய சொன்னால் நீங்கள் சொல்வது சரி என்றாகும்.

 • VSM Ali - anna nagar,இந்தியா

  ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றம் சொல்கிறது மாநில அரசு அவர்களை விடுவிக்கலாம் என்று . மாநில அரசோ அவர்களை விடுவிக்க சம்மதிக்கிறோம் , என்று நல்ல பெயர் வாங்கி கொண்டு , கவர்னருடைய ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கிறார்கள் .எல்லோரும் நம்பிக்கையாக இருக்கும்போது இதில் எனக்கு அதிகாரம் இல்லை , மத்திய அரசுதான் எல்லாமே என்கிறார் . உச்ச நீதிமன்றம் சொன்னதுதான் இறுதியானது , பிறகு எதற்கு இந்த வழக்கை இழுத்தடிக்கிறார்கள் ?

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  விடுதலை செய்ய கூடாது , இது சாதாரணமான கொலை அல்ல , கொலை செய்யப்படடவர் நாட்டின் பிரதமர்

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   Not PM, ex Prime minister. At the time of assassination, he was not the PM. Chandrasekar of SJP (with Congress support) was the PM.

 • surya - Chennai,இந்தியா

  ஆயுள் தண்டனை 14 வருடம். பதினாறு அப்பாவிகள் கொண்ணறதற்கு பதினாறு X 14 = 224 வருடம் ஜெயிலில் irukkavendum

  • இரா. சந்திரன் - சென்னை,இந்தியா

   உங்கள் 16 14 கணக்கு சரி.. ஆனால் ஆயுள் தண்டனை என்பது 14 வருடம் மட்டுமே என்று சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. குற்றம் புரிந்தது நிரூபிக்கப்பட்டு திட்டமிட்ட நிகழ்வாக இருப்பின் 14 வருட சலுகை கிடையாது.. ஆயுள் முழுவதும் என்றே கணக்கில் கொள்ளப்படவேண்டும். திட்டமிடாத நிகழ்வாக இருப்பின் (எதிர்பாராதவிதமாக) கருணை அடிப்படையில் 14 வருடங்களுக்கு பின் விடுவிக்கப்படலாம்.. The bench, however, clarified that under remission the appropriate government cannot reduce the period of sentence less than 14 years for a life convict. "In the case of a convict undergoing life imprisonment, he will be in custody for an indeterminate period." -> இது சுப்ரீம் கோர்ட் 2015 ல் சொன்ன விளக்கம்.

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   அவர்கள் அவர்கள் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும்.... கொலைகாரர்கள்

 • Htanirdab S K - Hyderabad,இந்தியா

  அவருடன் சுமார் ஒரு 20 பேர் மரணமடைந்தனர் (PC, Jayanthi, Maragattham, Moops, Vaalapaadi, EVKS, இவர்கள் யாருமே அதில் இல்லை) .. அந்த சாதாரண 20-30 தமிழ் மக்கள் கொடூர கொலைக்கு யார் பொறுப்பு .. அதற்கு தண்டனை என்ன ? எவ்வாறு இவர்களை வெளியே விட முடியும் ???

  • sethu - Chennai,இந்தியா

   அய்யா எய்தவன் எங்கோ ,அதன் பலனை அடைந்தவர்கள் எல்லோரும் இருக்க பாவம் இவர்களின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்ட்து ,இவர்கள் செய்த தவறு என்ன ,ஒருவர் வீடு வாடகைக்கு கொடுத்தவர்,மற்றவர்,காயத்திற்கு கட்டுபோடடவர், இன்னொருவர் கூட்டத்தை போட்டோ எடுத்தவர், இன்னொருவர் காமெராவிற்கு பாட்டரி வாங்கி வந்தவர் ,இன்னொருவர் கட்டுப்போட துணி வாங்கிவந்தவர் ,இன்னொருவர் வீட்டு புரோக்கர்,இன்னொருவர் கமெரா லைட் மென் ,ஆக முக்கியமானவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை அதில் முதன்மையானவர், மூப்பனார், ஜெயந்தி, சிதம்பரம், ஜெயலலிதா இவர்களிடம் யாராவது கேள்வி கேட்டார்களா இல்லையே ,இவர்களின் பாவத்தின் பலன் சோனியாவின் குடும்பத்தை நிம்மதி இல்லாமல் கொல்லும்.

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   தெரிஞ்சா எழுதுவும் ...இல்லையென்றால் சும்மா இருக்கவும் ....மூப்பனார் தான் அங்கே இருந்தவர்....அவர்தான் அடையாளம் காட்டியவர்.....உன் குடும்பத்தில் (மன்னிக்கவும்) இது போன்ற சம்பவம் நடந்து இருந்தால் இப்படி எழுத முடியுமா உங்களால் ?

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  25 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் இவர்களை விடுதலை செய்துவிடலாம். தேவை இல்லாமல் இதைவைத்து அரசியல் செய்துகொண்டிருக்கும் உதிரி கட்சிகள் வேறு வேலை பார்க்க போவார்கள்.

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   அண்ணாமலை அய்யா உங்கள் இந்த கருத்தை நான் ஆதரிக்க வில்லை. அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும்

  • Jaya Ram - madurai,இந்தியா

   அது சரி இந்திராவின் கொலைக்கு பின்னால் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர் அதற்க்கு யாரும் தண்டிக்கப்படவில்லை

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  ஜனாதிபதி , உச்ச நீதி மன்றத்திற்கு என் கேள்வி... ஆயுள் தண்டனை எத்தனை வருஷம்?? சாகும் வரை சிறையிலே இருக்க வேண்டுமா?? 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது உச்ச நீதி மன்றம். தெளிவாக பதில் சொல்லுங்களேன்???? மத்திய அரசு இதில் மூக்கை நுழைக்க வேண்டாம்.

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   ஏற்கனவே உச்ச நீதி மன்றம் தெளிவு படுத்தி விட்டது ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுவதும் தான்

 • ramakrishnan balasubramanian - Chennai,இந்தியா

  நீதி மன்றங்கள் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும் மக்களுக்கு ஆயுள் தண்டனை என்பது எத்தனை வருடங்கள் ? எண்ணிக்கையில் சொல்லுங்கள் ? 14 வருடங்கள். அப்படியானால் யார் நிர்ணயித்தார்கள் ? ராமன் காட்டுக்கு சென்ற வருடங்களா ? உயிர் உள்ள வரை அல்லது சாகும் வரையிலா ? இதை சரியாக தெளிவு படுத்தியிருந்தால் இன்று எந்த குழப்பங்களும் வந்திருக்காது. இனிமேலாவது தண்டனை வழங்கும்போது வருடங்களை குறிப்பிடவும். மேலும் நீதிபதிகள் மற்றும் கவர்னர் அனைவரும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள். அனைவரும் அரசாங்க ஊழியர்களே அப்படி இருக்க அனைவரும் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டவர்களே. ஆகையால் மத்திய அரசு எடுக்கும் முடிவே இறுதியானது. ராகுல் காந்தி மன்னிக்கலாம். மற்றவர்களும் அதிகம்பேர் இறந்துவிட்டார்களே ? அவர்கள் கருத்தை கேட்க வேண்டாமா ? நிதானமாகத்தான் முடிவு வரும் ஆனால் வராது. நாம் எதிர் பார்க்கும் அனைத்தும் நிகழ வாய்ப்பு மிக குறைவு. எது என்னுடைய கருத்து. இந்த விளையாட்டு அரசியல் செய்யத்தான் பயன் படும். பொறுத்திருந்து பார்ப்போம் இவர்கள் லீலைகளை

  • ஆப்பு - ,

   இதெல்லாம் நீதியரசர்கள் இஷ்டம். நம்ம சட்ட மேதைகள் உருவாக்கிய வழவழ கொழகொழ சட்டம் இல்லியா...அப்பிடித்தான் சூப்பரா இருக்கும்.

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் தான், பதினான்கு வருஷம் என்பது இவர்கள் தங்கள் வசதிக்காக வைத்து கொண்டது. அதுவும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை. இவர்களுக்கு கருணை என்பதே கூடாது. வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும்.

 • Jaya Ram - madurai,இந்தியா

  மும்பை குண்டுவெடிப்பில் பல அப்பாவிகள் இறந்தார்கள் அதற்காக உதவி செய்த சஞ்சய் தத் உள்ளேயே இருந்தாரா, இல்லை அதற்க்கு காரணமானவர்களை இன்னும் கைது செய்யமுடியாமல் தானே இருக்கிறீர்கள் அப்போ எப்படி சஞ்சய் தத்தினை விடுதலை செய்தீர்கள் அவர் தேசிய கட்சியின் எம்பி மகன் என்பதாலயா இந்த பாரத தேசம் நீதிக்கு பெயர் போனது மஹாபாரதம், ராமாயணம் மற்றும் தமிழ் சிலப்பதிகாரம் சோழர், பாண்டிய வரலாறுகளும் அதையே கூறுகின்றன கோர்ட்டில் சத்தியம் வாங்கும் புத்தகத்தின் மீதுள்ள நம்பிக்கையினை நீங்களே தகர்த்து எறிந்து கொண்டு இருக்கிறீர்கள் எது நீதியோ அதை செய்திருக்கணும், ஒன்று தீர்ப்பு கொடுத்தவுடன் தூக்கிலிட்டிருக்க வேண்டும் அப்போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு இப்போ கோர்ட்டில் தண்டனை குறைக்கப்பட்டு அதன் பின்னர் கோர்ட் அனுமதியின்படி விடுதலை கூறுவதை அனுமதிக்க முடியாதென்றால் கோர்ட் இந்த நாட்டிற்கு தேவையில்லையே

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   சஞ்சய் தத் மீது இதை வழக்கு அவர் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்து இருந்தார் என்பதே. அவர் குண்டு வெடிப்புக்கு உதவி செய்தார் என்பது இல்லை.

  • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

   அந்த பயங்கர ஆயுதம் அவனுக்கு எப்படி கிடைத்தது????? தீவிரவாத தொடர்பு தானே????? துப்பாக்கியால் சுட்டால் அவனுக்கு தான் தண்டனை தர முடியும். துப்பாக்கிக்கு அல்ல....... நெத்தியடி பதில் கொடுத்த ஜெயராம், மதுரை அவர்களுக்கு நன்றி....

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   பேரறிவாளன் பேட்டரி வாங்கி கொடுத்ததற்காக சிறையில் இருக்கிறார் பழ ராமா..

 • senthil - Qatar,இந்தியா

  நான் இன்று நம்முடைய தினமலர் நாளிதழுக்கு மிகவும் நன்றி கூறுகிறேன், ஏன் என்றால் அனைத்து ஊடகம் மற்றும் தொலைக்காட்சி செய்திகள் எல்லாம் எதோ இந்த ஏழு பேரும் இந்திய விடுதலைக்கு பாடுபட்டது போல் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் , ஆனால் நம் நடுநிலையான தினமலர் மட்டும் தான் மிக சரியாக இந்த ஏழுபேர் விடுதலையை மிகவும் தவறு என்று மத்திய உள்துறை இன்று அறிவித்ததை செய்தியாக வெளியிட்டுள்ளது. ஆனால் மற்ற ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிடவில்லை, மேலும் இந்த விடுதலை புலிகள் விசயத்தில் அணைத்து தமிழ் ஊடகங்களும்(தினமலர் தவிர ) நம் தமிழ் மக்களுக்கு உண்மையை சொல்லாமல் பொய் செய்திகளை இன்று வரை வெளியிட்டு வருகிறார்கள், அதனால் தான் திரு. ராஜீவ் அவர்களை வெடிகுண்டு வைத்து கொன்ற இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தவறான ஒரு முன் உதாரணத்தை தொடர்ந்து இருபத்திஐந்து வருடங்களாக கூறுகிறார்கள் நாமும் ஒன்றும் தெரியாமலே தீவிரவாதத்துக்கு சப்போர்ட் செய்கிறோம் இது மிகவும் தவறு இனிமேலாவது நாம் இது போல் செய்யாமல், நம்முடைய தமிழ் நாளிதழ் தினமலர் போன்ற நடுநிலையான செய்தித்தாள்களை படித்து உண்மை என்ன என்று தெரிந்து நம் நாட்டிற்கு ஆபத்து வராமல் மற்றவர்களின் சுய அரசியல் லாபத்திற்கு ஆட்படாமல் நம் தமிழ் நாட்டையும் இந்திய நாட்டையும் காக்கவேண்டும், இது போன்ற விடுதலை புலிகள் தீவிரவாதிகளுக்கு மற்றும் அவர் தொடர்புடைய போலி தமிழ் அரசியல் வாதிகளுக்கு சப்போர்ட் செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள், அதுதான் நாம் நம் தமிழ் சமுதாயத்துக்கு செய்யும் கடமை, மேலும் நான் நம்முடைய மத்திய அரசுக்கு மற்றும் தமிழ் நாடு மேதகு கவர்னர் அவர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் தயவு செய்து இந்த ஏழு பேர்களை வெளியே விட வேண்டாம் இது என் பணிவான வேண்டுகோள். மத்திய அரசு சரியான முடிவு எடுக்கும் என்று நம்பும் ஒரு சாதாரண வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் . நன்றி .

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு இருக்கு என்பது பற்றி சட்டம் படித்த சுப்ரிம் கோர்ட்டுக்கு தெரியாதா, அப்புறம் ஏன் கவர்னர் முடிவெடுக்கலாம் என்று அதிகாரத்தை கவர்னரிடம் கொடுக்கிறது, சுப்ரிம் கோர்ட் கவர்னரிடம் அதிகாரத்தை கொடுத்த பிறகு மத்திய அரசை கேட்க வேண்டிய அவசியம் இல்லை, மத்திய அரசின் அதிகார குறுக்கீடு சுப்ரிம் கோர்ட்டின் தீர்ப்பை அவமதிப்பதாக உள்ளது, மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது..........,

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  தேவையற்ற காரணங்களுக்காக தமிழர்களின் விரோதத்தை தொடர்ந்து சம்பாத்திக்கொண்டு வருகிறது மோடி அரசு. அப்படியெனில் வராக்கடன்களை தள்ளுபடி செய்வது தவறான முன்னுதாரணம் இல்லையா? அவனவன் வலி அவனவனுக்கு தெரியும்.

  • Asokan - Kumbakonam,இந்தியா

   //வராக்கடன்களை தள்ளுபடி செய்வது தவறான முன்னுதாரணம் இல்லையா?// யாருக்காக செய்தனர்? ஏழை விவசாயிகளுக்கா? இல்லை நலிவடைந்த தொழில் செய்பவர்களுக்கா? அவர்களின் பார்வையில் வருவது எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே. ரிலையன்ஸ், அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற நிறுவனங்கள் லாபத்தில் இயங்கவேண்டும் என்பதே இந்த அரசின் முக்கிய நோக்கம். அவர்களுக்கு சிறு பிரச்சினை என்றாலும் அரசும், அதிகாரமும் என்னவேண்டுமென்றாலும் செய்யும். சாதாரண குடிமகனின் சிறிய சேமிப்பை துடைத்து எடுத்து பல லட்சம் கோடிகளில் கொழிக்கும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு வாரிவழங்குவதுதான் இந்த அரசின் முக்கிய கொள்கை. சாதாரண நாட்டு மக்களுக்கான அரசு இது அல்ல.

  • இரா. சந்திரன் - சென்னை,இந்தியா

   எந்த வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது? NPA ஆக்ட் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

 • Jaya Ram - madurai,இந்தியா

  அதை நீங்க குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கியவுடன் செய்திருக்கணும் அதைவிடுத்து சிறையில் இவ்வளவு நாள் வைத்திருந்தது உங்கள் அரசாங்கத்தின் குற்றம் செய்வது எல்லாம் நீங்கள் கடைசியில் நியாயம் கேட்கப்போனா உடனே தமிழனுக்கு சப்போர்ட் பண்ணுவதா என்றுகேட்பது, இல்லையென்றால் தேசத்துரோகி என்பது இதுதானே உங்களின் நிலைமை.

  • Asokan - Kumbakonam,இந்தியா

   //இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு நாடுகளிடம் உதவிகளை கேட்டுள்ளதால், இந்த வழக்கு தற்போதும் விசாரணையில் உள்ளது' என, அந்தக் குழு, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்துள்ளது.// 27 ஆண்டுகளாக விசாரணை செய்துகொண்டுள்ளனர்...இனியும் விசாரணை செய்வர்...செய்துகொண்டே இருப்பர்....சிறையில் இருக்கும் 7 பேரும் வயதாகி இறக்கும்வரை இந்த விசாரணை தொடரும்...அதன்பிறகு இப்படி அறிக்கை வரும்....''வழக்கில் தொடர்புடையவர்கள் இறந்துவிட்டதால் இந்த வழக்கு இத்துடன் முடித்துவைக்கப்படுகிறது''.

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   இறந்தால் இருக்கட்டுமே? என்ன நாட்டின் சுதந்திரத்திற்க்காக ஜெயில் போனார்களா? என் நாட்டின் ஒரு இளம் தலைவரை கொன்று விட்டு அவருடன் சேர்த்து பதினான்கு அப்பாவிகளை கொன்ற கொலைகாரர்கள்.

  • Asokan - Kumbakonam,இந்தியா

   என் கருத்து கொலையாளிகளின் செயல்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல. இத்தனை ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் காலம் கடத்தினால் முடிவு எப்போது? இதில் தொடர்புடையவர்கள் வெளிநாட்டில் இருப்பார்கள் என்றால் விசாரணை செய்ய என்ன தடை? அத்துடன் இந்த கொலையில் பல மர்மங்கள் வெளியில் வராமலே அமுக்கப்பட்டுவிட்டன. காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் அன்று சம்பவம் நடந்த இடத்தில் இருந்தும் வழக்கில் சிக்காமல் தப்பித்துவிட்டனர் அல்லது தப்பவைக்கப்பட்டனர். அதில் ஒருவர் மரகதம் சந்திரசேகர். பல உண்மைகள், கேள்விகள், மர்மங்கள் சரியாக விசாரணை செய்யப்படாமல் அரசியல் காரணங்களுக்காக விடப்பட்டது. கடந்த 27 ஆண்டுகளாக செய்யாத விசாரணையை இனிமேல்தான் செய்யபோகிறார்களா என்பதுதான் என் கேள்வி.

 • Arasu - OOty,இந்தியா

  வெளியே விட முடியாதுன்னா ..எதுக்கு சம்பளம் வாங்குற

 • Jaya Ram - madurai,இந்தியா

  ஏறத்தாழ 27 வருடங்களாக ஒரு வழக்கினை முடிக்க துப்பில்லை இதுல பேச்சுவேற வேண்டிக்கிடக்கு, சாதாரணமாகவே 12 ஆண்டுகள் ஒருவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றால் அவர் மரணமடைந்துவிட்டதாக கருதி இன்சூரன்ஸ் பணத்தினை வாரிசுதாரர்களுக்கு கொடுக்கலாம் என்ற நிலைமை இருக்க 27 வருடங்களாக ஒரு வழக்கில் இன்னும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறும் இவர்கள் எப்படி இந்த 7 பேருக்கும் தண்டனை வாங்கி கொடுத்தார்கள் என்பதே சந்தேகமாக இருக்கிறதே பொதுமக்களுக்கு, இன்னும் விசாரணையே முடியாத போது தண்டனை எப்படி வழங்கப்பட்டது.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ( நீங்கள் குறிப்பிட்ட சொல் நீக்கப்பட்டு விட்டது)

 • Balaji - Bangalore,இந்தியா

  குண்டு வெடிப்பில் இறந்த 16 பேரின் குடும்பம் இந்த 7 பேரை மன்னிக்குமா? 16 பேரின் குடும்பம் என்னவாயிற்று?

  • Nancy - London,யுனைடெட் கிங்டம்

   நாட்டின் சுதந்திரத்திற்க்காக ஜெயில் போனார்களா? என் நாட்டின் ஒரு இளம் தலைவரை கொன்று விட்டு அவருடன் சேர்த்து பதினான்கு அப்பாவிகளை கொன்ற கொலைகாரர்கள்....

 • SB.RAVICHANDRAN -

  அப்புறம் யாருக்குத்தான் அதிகாரம் இருக்கு, அமெரிக்கவுக்கா.

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  பிரதமரை கொன்றவர்களை விடுவித்தால், குண்டுவெடிப்பு நடத்திய தீவிரவாதிகளையும் விடுதலை செய்ய சொல்லுவார்கள்..தவறான முன்னதாரணமாகிவிடும்...... .இது தேசத்தின் பாதுகாப்பு விஷயம்....

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  இவர்கள் நேரடி குற்றவாளிகள் கிடையாது. டார்ச் பேட்டரி செல் வாங்கி கொடுத்ததாகவும். தானு என்று சொல்லப்பட்ட பெண்ணிற்கு நாப்கின் வாங்கி கொடுத்ததாகவுமே இவர்கள் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டு உள்ளது. இதுக்கு இத்தனை ஆண்டுகாலம் சிறைவாசம் என்பது மிக மிக அதிகம். விடுதலை செய்வதுதான் மிகச் சிறந்த நடவடிக்கையாக அமையும்.

  • Htanirdab S K - Hyderabad,இந்தியா

   உங்கள் அம்மா அல்லது குழந்தை அதில் இறந்து இருந்தால், விட்டு விடுவீர்களா ?

  • இரா. சந்திரன் - சென்னை,இந்தியா

   "டார்ச் பேட்டரி செல் வாங்கி கொடுத்ததாகவும்" -> பாஸ், அவங்க வாங்கிக்கொடுத்தது இடுப்பு பெல்ட் வெடிகுண்டை செயல்படுத்த தேவையான 9v பேட்டரி. அதுமட்டுமல்ல அந்த குண்டு எதற்க்காக, யாரைக்கொல்ல என்பதை முதலில் இருந்தே தெரிந்து வைத்திருந்தனர்.. இங்கே சிவராசன், தணுவிற்க்கு (அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என தெரிந்தும்) போதிய வசதிகளை செய்து கொடுத்திருக்கின்றனர்.. உங்களை ஒருவர் கொல்ல வருகிறார்.. அவருக்கு (எதற்க்காக வருகிறார் என தெரிந்தும்) நான் காய்கறி நறுக்கும் கத்தி எடுத்துக்கொடுக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.. காய்கறி நறுக்கும் கத்தி கொடுப்பதெலாம் பெரிய தணடனைக்குரிய குற்றமா என கூறுவீர்களா? தீர்ப்பில் இருந்து பேட்டரி வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு முழு தீர்ப்பும் படிக்காமல் சொல்பவர் கூறும் விஷயம் இது.. ராம்ஜெத்மலானி முதல் பல வக்கீல்கள் இவர்களுக்காக வாதாடினார்களே... அவர்கள் ஏன் பேட்டரி மட்டும் வாங்கிக்குடுத்ததாக வாதாடவில்லை / அப்பீல் செய்யவில்லை? யோசித்து பாருங்கள்.. இந்த பேட்டரி மட்டும் என்கிற புரளி கழகங்களால் பரப்பப்பட்ட விஷயம்..

 • Meenu - Chennai,இந்தியா

  வேண்டுமென்றே ஒரு அமைப்பு இன்னொரு அமைப்பை பார்த்து அவர்கள் நினைத்தால் விடுதலை செய்யலாம், அவர்கள் இன்னொரு அமைப்பை பார்த்து இவர்கள் நினைத்தாள் விடுதலை செய்யலாம் என்று சுற்றி சுற்றி, மாறி மாறி நாடகம் ஆடி எல்லோரையும் ஏமாற்றுகின்றனர். இது தான் உண்மை.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  என்ன சட்டமோ போங்கப்பா......ஒன்னு மட்டும் புரியுது. மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கும் கவர்னர் தேவையில்லை. ஆட்டுத்தாடி மாதிரி ஒட்டிக்கொண்டு பெரிய இம்சை.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அன்றைக்கு ராஜீவை போட்ட இவர்கள் விடுதலை ஆகி வெளியில் வந்தால் ராகுலையும் போட்டு தள்ள மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? அல்லது ராஜீவின் மனைவி என்பதற்காக சோனியாவை போட்டு விட்டால்? இல்லை பிரியங்காவை போட்டு விட்டால்? இதற்க்கெல்லாம் உங்களால் உத்திரவாதம் தரமுடியுமா? தமிழர் என்பதற்காக கொலையாளிகளை சப்போர்ட் செய்வதா?

  • Abdul Rahman - Madurai,இந்தியா

   மிக சரியான கேள்வி. எந்த மொழி காரராக இருந்தாலும், நமது (முன்னாள்) பிரதமரை கொடூர கொலை செய்தவர்களை மன்னிக்க கூடாது. தூக்கு ஒன்றே தீர்வு.

 • tamil - coonoor,இந்தியா

  அதிகாரம் இல்லாத அந்த பதவி எதுக்கு, பேசாமல் ஆளுநர் பதவியை நீக்கி விடலாமே

  • இரா. சந்திரன் - சென்னை,இந்தியா

   பதவிப்பிரமாணம் செய்து வைக்க..

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இந்த 7 பேரையும் உடனடியாக தூக்கில் இட்டு கொன்று பிரேதத்தை அவங்க ஊருக்கு அனுப்பி வெக்கணும். நமது நாட்டு முன்னாள் பிரதமரை கொன்னு இருக்காங்க அவங்களுக்கு போயி சப்போர்ட் பண்ணுறீங்களே.

  • பாமரன் - ,

   இந்த எலி இப்போ ஏன்... ஓடுது...???

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஒன்று மட்டும் தெரிகிறது அவர்களை விடுவிக்க யாரும் தயாராக இல்லை...

  • Htanirdab S K - Hyderabad,இந்தியா

   எதற்கு விடுவிக்க வேண்டும் என்கிறேன் ? என்ன தேசத்தொண்டு ஆற்றி சிறை சென்றார்களா என்ன சுதந்திர நாள் குடியரசு நாள் பார்த்து விடுவிக்க ????

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வை மிகவும் பாராட்ட தக்கது....இந்த கொலைகாரர்களை வெளியில் விட கூடாது

 • Muruganandam - Madras,இந்தியா

  வெளியே விட மாட்டிங்க அப்படித்தானே ? 27 வருடம் சிறையில் இருந்து இருக்கிறார்கள். இதுவே மிகப்பெரிய தண்டனை. தயவு செய்து politics செய்யாமல் அவர்களை வெளியே விடுங்க. தவறு செய்யாதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை.

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   அங்கே ஒன்னும் தெரியாத அப்பாவிகள் பதினான்கு பேர் இறந்தார்கள் அவர்கள் ஆத்மா சும்மா விடுமா? ஆயுள் முழுவதும் சிறையில் தான் இருக்க வேண்டும்... மத்திய அரசு பார்வை மிகவும் சரி.....அந்த கொலைகாரர்கள் 5 பேர் வெளிநாட்டவர்....விடவே கூடாது

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

   உன் உடன் பிறந்தோரை யாராவது கொலை செய்தால் நீ இப்படி பேசுவியா ..?

  • Htanirdab S K - Hyderabad,இந்தியா

   எதற்கு விடுவிக்க வேண்டும் முருகானந்தம்? என்ன தேசத்தொண்டு ஆற்றி சிறை சென்றார்களா என்ன சுதந்திர நாள் குடியரசு நாள் பார்த்து விடுவிக்க ???? செய்தது மாஸ் மர்டர்.. அதிலென்ன 27 வருடம் 30 வருடம் ? ஆயுள் முழுக்க உள்ளே தான் இருக்க வேண்டும்

 • ஆப்பு -

  அப்போ சுப்ரீம் கோர்ட் எதுக்கு? எல்லாரையும் வூட்டுக்கு அனுப்பிச்சுட்டு நீங்களே எல்லா தீர்ப்பையும் குடுங்க.... அச்சே தின் ஆத்தா ஹைன்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இவர்களை விடுவித்தால் அதே அடிப்படையில் கோவை குண்டுவெடிப்பு மும்பை தொடர் குண்டுவெடிப்பு போன்றவற்றின் கொடும் குற்றவாளிகளையும் விடுவிக்கக் கோரலாம் என்ற எண்ணத்தில்தான் திராவிஷக்கட்சிகள் விடுதலை செய்யப் போராடுகின்றன . அந்நிய தூண்டுதல் பயங்கரவாதிகளை தப்பிக்கவிட்டு சிறுபான்மையினர் வாக்குவங்கியை பலப்படுத்த நடக்கும் சதியே இது .பாஜகவில் பலர் ராஜீவின் மரணத்திற்காகவே பெரிதாக வருந்தவில்லை ராஜீவை புனிதராகக் கருதவில்லையென்றாலும் இந்த ஏழுபேரையும் விடுதலை செய்ய ஒப்புக்கொள்ளாமலிருப்பது நாட்டுக்கு நல்லதே .விடுதலை பின்விளைவுகள் பயங்கரமாயிருக்கும் .ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த நான் இந்த விடுதலையை கடுமையாக எதிர்க்கிறேன் டுமீளனை ஏமாற்றலாம் தேசபக்த பாரதீயனை ஏமாற்றமுடியாது

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ராஜீவ் கொலையில் பிரபாகரனுக்கு சம்பந்தமிருக்க வாய்ப்பேயில்லை ஏனெனில் அந்த தேர்தலில் ராஜீவ் தோற்பது உறுதி என எல்லாக் கருத்துக்கணிப்புகளும் உளவுத்துறை அறிக்கையும் வெட்டவெளிச்சமாகியிருந்தன படுகொலைக்குப்பின் தேர்தலிலும் காங்கிரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. .பிரதமராக துளியும் வாய்ப்பே இல்லாமலிருந்த ஒருவரை இத்தனை கஷ்டப்பட்டு கொல்லவேண்டிய அவசியமே புலிகளுக்கு இல்லை. சிவராசனும் மற்றும் சிலரும் புலிகள் இயக்கத்திலிருந்தபடியே சந் ஸ்வாமி இத்தாலிய ஆயுத விற்பனையார் தூண்டுதலில் பணத்துக்காகவோ என்னவோ கொலை செய்துள்ளது புரிகிறது. .சதித்திட்டம் பற்றிய விசாரணை இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னும் நடக்கவில்லை என்பது இதனை உறுதிப்படுத்துகிறது காங்கிரசுக்கு சம்பந்தமில்லையென்றால் நிச்சயம் விசாரணையை விரைவாக முடித்திருப்பர் .உண்மை சதிகாரர்கள் கைது செய்யப்படும்வரை இவர்களை விடுதலை செய்வது இத்தாலி மாஃபியா மற்றும் திராவிஷ தேசத்துரோக கும்பலுக்கே உதவும்

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

   நான்கு வருடங்களாக நீ சார்ந்திருக்கும் பிஜேபி தானே ஆட்சி செய்கிறது ... நீ கூறுவது உண்மையென்றால் இந்த கோரிக்கையை உன் கட்சியிடம் வைத்து மறு விசாரணையை செய்ய வேண்டியது தானே .... மத்திய அரசுக்கு இது தெரியாமலா இருக்கும் ... சும்மா இந்த சமூக வலைதளத்தில் வரும் கருத்துகளை படித்து விட்டு எதாவது உளறுவது ...

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

   நீங்கள் கூட கேட்கலாமே ( சத்தியமாக என் கட்சி என எதுவுமில்லை.) மறு விசாரணைமூலம் என்ன சாதிக்கப்போகிறோம்? அனாவசியமாக இத்தாலி குடும்பத்துக்கு விளம்பரமும் அனுதாப அலையும்தான் கிடைக்கும் .நடந்தது உட்கட்சி விவகாரம் ( வாரிசு பிரச்னை போன்றதோ என்னவோ?).அவர்களுக்கு விருப்பமிருந்தால் விசாரிக்கட்டுமே . ஆனால் இந்த ஏழுபேரும் உள்ளேயிருப்பதே நல்லது .இவர்கள் ஒன்றும் சம்பந்தப்படாத உத்தமர்களல்ல வெறும் கைக்கூலிகளே

 • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

  MATTER HAS COME BACK TO SQUARE ONE. NO END TO THE PROBLEM.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  அதுனாலே என்ன ?இப்போ கொஞ்சம் செட்டில் ஆகிவிட்ட அதிமுக ஆட்சிக்கு எதிரா போராடிக்கிட்டே இருக்க பெர்மனெண்ட் ஆனா ஒரு விஷயம் நம்ம எதிர்க்கட்சியினருக்கு கிடைச்சிருக்கே?

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  திட்டமிட்டு கூட்டு படுகொலை செய்த கொலையாளிகளை ஆதரிப்பவர்கள் தமிழர்களாகவோ மனிதர்களாகவோ இருக்க வாய்ப்பில்லை....

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இராஜீவ் மட்டும் கொலை செய்யப்படவில்லை.. பலர் கொல்லப்பட்டார்கள்... அத்தனை வழக்குகளும் முடியவேண்டும்... கொல்லப்பட்ட மற்றவர்களை ஏதோ வெள்ளரிக்காயை வெட்டி வீழ்த்தியது போல நினைக்கிறார்களோ? அப்படியே ஒருவேளை விடுதலை செய்தாலும் - அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்...

  • பாமரன் - ,

   ஆங்... காசி... அந்த கடைசி வரியில் சொன்னது தான் சரி....

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  How can the Supreme Court suggest this?

 • s t rajan - chennai,இந்தியா

  திமுக என்ன சொல்லுது. ராஜீவ் கொலையாளிகளை அரசு சொல்றமாதிரி விடுதலை செய்யணுமா..... அப்படின்னா ஜெயாவுக்கு பாரத ரத்னாவும் கொடுக்கணுமா ... கவர்னர் என்ன செய்யணும் / ஒண்ணுல அமைச்சரவை சொல்றமாதிரி கேட்கணும் அண்ட் இன்னொன்னுல கேட்க கூடாதில்லையா ?

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  அதிகம் பொங்குபவர்கள் இந்த 7 கொலையாளிகளுக்கு துணையாக உள்ளே சென்று கம்பி எண்ணலாம்......

 • Rajaram Kandalu - Madurai,இந்தியா

  சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டார்.

 • Vignesh Rajan - chennai,இந்தியா

  வாவ் சூப்பர்..ராஜிவ் கொலை குற்றவாளிகளை எந்த காரணம் கொண்டும் வெளியே விட கூடாது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement