Advertisement

திருவொற்றியூரில் மெட்ரோ பணி தீவிரம்

திருவொற்றியூர்:திருவொற்றியூரில், மெட்ரோ ரயில் பாதைக்காக, துாண்களை இணைக்கும், 'கான்கிரீட் டெக்' அமைக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.


வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வரை, 3,770 கோடி ரூபாய் செலவில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.


கான்கிரீட் டெக்


மொத்தம், 9 கி.மீ.,க்கு அமையவுள்ள இந்த பாதையில், 2 கி.மீ., துாரம் சுரங்க வழியாகவும், 7 கி.மீ., துாரம் மேம்பால பாதை வழியாகவும் அமைக்கப்பட உள்ளன.வண்ணாரப்பேட்டையில் உள்ள தங்கச்சாலை பகுதியில் துவங்கி, கொருக்குப்பேட்டை வரையிலான சுரங்கப் பணிகள், கடந்தாண்டு செப்டம்பரில் முடிந்தன.திருவொற்றியூரில் உள்ள சுங்கச்சாவடி முதல் விம்கோ நகர் வரையிலான, 5 கி.மீ., துாரத்திற்கு, மேல் வழிப்பாதைக்கான துாண்கள் அமைக்கும் பணிகள்,
தற்போது வேகமாக நடந்து வருகின்றன.


இதில், சுங்கச்சாவடியில் இருந்து, துாண் எண், 68ல் துவங்கி, 84 வரை, 'கான்கிரீட் டெக்'அமைக்கும் பணிகள் முடிந்து உள்ளன.பணிகள் வேகம்அதே போல், திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் இருந்து, விம்கோ நகர் மார்க்கெட் வரை, 'கான்கிரீட் டெக்' அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.இடைப்பட்ட பகுதிகளில், துாண்களுக்கான அடித்தளம் மற்றும் கம்பி கள் கட்டும் வேலை நடந்து வருகிறது. பணிகள் வேகமாக நடந்து வருவதால், விரைவில், திருவொற்றியூர் வரை, மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement