Advertisement

போலி சாமியார் ஆசாராம் கவர்னருக்கு கருணை மனு

ஜோத்பூர் : சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, போலி சாமியார் ஆசாராம் பாபு, கவர்னருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.


ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர், ஆசாராம் பாபு, 77. கடந்த, 2013ல், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகேயுள்ள ஆசிரமத்தில், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தான். இந்த வழக்கில், கைது செய்யப்பட்டு, ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், ஆசாராம் பாபுவுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு, இன்னும் விசாரணைக்கு ஏற்கப்படவில்லை.


இந்நிலையில், ராஜஸ்தான் கவர்னர், கல்யாண் சிங்கிற்கு, போலி சாமியார் ஆசாராம் அனுப்பியுள்ள மனுவில், 'என் வயது மற்றும் உடல் நிலைக்கு, ஆயுள் தண்டனை என்பது, மிக அதிகபட்ச தண்டனை. எனவே, எனக்கு கருணை காட்டி, தண்டனையை குறைக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.


இதையடுத்து, ஆசாராம் வழக்கு தொடர்பான முழுமையான விபரம் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி, மாநில உள்துறை செயலருக்கு, கவர்னர் கல்யாண் சிங் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • vbs manian - hyderabad,இந்தியா

  எந்த மன்னிப்பும் கருணைக்கும் அருகதை இல்லை

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  நடவடிக்கை என்றவுடன் தனது வயது, உடல்நிலை எல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது .....

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  சட்டப்படி அவன் உரிமையை கேக்குறான்.. கேக்கட்டும்.. ஆனா வுட்றாதீங்க.. வயச காரணம் காட்டுவான்..ஆனா வுட்றாதீங்க.. அடிச்ச்சுக்கூட கேப்பான் அப்பவும் விட்றாதீங்க..

 • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

  கொலை செய்தவனையும் மன்னித்துவிடலாம் ......ஆனால் இந்த காமுகன்... ,மற்றும் பாதிரியார் வேடத்தில் திரியும் காமுகர்களை அல்ல.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இன்னுங் கொஞ்சநாள்ல வர்றப்போற ராசஸ்தானு election ல இந்து மதவெறிய இப்பமே தூண்டிவிடறானுங்க பார"தீய" ஜல்சா பார்ட்டி boys ..

 • ஸாயிப்ரியா -

  கருணை மனு வின் இன்னொரு பெயர் தான் பாவ மன்னிப்பு இடம் தான் வேறு. இந்த மனுவும் பாவமன்னிப்பும் அறவே நீக்கப்பட வேண்டும்.தப்புக்கு தண்டனை மட்டுமே தீர்வு.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அவர் வணங்கும் தெய்வம் துணைக்கு வரவில்லையா...

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  உனது வயது, உடல் நிலை உனக்கு இப்போ புரியுது, இதை அந்த பெண் பிள்ளைகளை தொடும் போது வந்திருக்கணும், இப்ப உனது வயது புரிந்து என்ன பிரயோசனம், நீ வெளியில் இருப்பதும் ஒன்னு, உள்ளே இருப்பதும் ஒன்னு.

 • kundalakesi - VANCOUVER,கனடா

  பிஷப்பெல்லாம் ஜாலியா திரியுறாங்க . இவுரு இந்துன்னா வழக்கு.

 • ramu narayanan - Sydney,ஆஸ்திரேலியா

  சாமி நீங்கள் பா ஜ க வில் சேர்ந்தால் விடுதலை, விடுதலை, விடுதலை . பாராளுமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யணும், நல்லா திறமையா பேசணும் பா ஜ க வின் இந்தியாவில் அனைத்தும் சாத்தியமே.

 • கட்டத்துரை - ahmadabad ,இந்தியா

  சிறப்பு.. உடனே தண்டனையை குறையுங்கள்.. இல்லாட்டி விடுதலை செய்யுங்கள்.. ஒரு சாமியாரை எப்படி கைதி செய்து ஜெயிலில் அடைக்க முடியும்? இதனால் தான் பெட்ரோல் விலையும், இந்திய ரூபாயின் மதிப்பும் கூடுயுள்ளது

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சாமியார் போல் ஓகே... ஆனால் பிஷப் என்றால் அவனை போலீஸ் கூட விசாரிக்க மாட்டேன் என்கிறது.... கன்னியாஸ்திரிகளை சீரழித்த பிஷப் என்றால் புனிதன் என்று என்று நீதித்துறை நினைக்கிறதோ - நிச்சயம் இந்தியா உருப்படாது... நீதித்துறையில் உள்ளவர்கள் கருப்புக்கண்ணாடி போட்டிருப்பார்கள் போல இருக்கிறது. கயவர்களை மதத்தை வைத்து மாப்புக்கு விடாமல் உள்ளே வைக்கவேண்டும்... இல்லை என்றால் இந்தியாவின் நீதிக்கு இடமில்லை என்றுதான் சொல்லவேண்டும்...

 • Karthik - Chennai,இந்தியா

  இன்று தான் ஒருவர் சிறுபான்மை பற்றி பேசினார் அதற்குள் பெரும்மான்மை பற்றி செய்தி வந்து விட்டது. யாருக்கு தைரியம் இருக்கு இவரை ஆதரித்து பேசுவதற்கு. இன்று கிறிஸ்டின் பாதிரியாரை கழுவி உற்றினீர்கள். இப்போது வந்து கழுவி ஊத்தினால் நான் பெருமைபடுவேன்

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இன்னும் பல பெண்களின்/குழந்தைகளின் வாழ்க்கையை சீரழிக்க போலி சாமியார் ஆசாராம் பாபு விடுதலை செய்யப்பட வேண்டும் (இவனுக்கெல்லாம் கிராமங்களில் உழவு மாடுகளுக்கு செய்வது போன்று செய்து விடவேண்டும்).

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement