Advertisement

'அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்' ; புதிய வீடியோவில் சோக்சி மறுப்பு

புதுடில்லி : வங்கிகளில் கடன் வாங்கி, 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், வெளிநாடு தப்பியுள்ள பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி, ''என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை; ஜோடிக்கப்பட்டவை,'' என, புதிய வீடியோவில் கூறியுள்ளார்.


கோரிக்கை :




வங்கிகளில் கடன் வாங்கி, 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பிரபல வைர

வியாபாரி, நிரவ் மோடி, அவனது உறவினரான, வைர வியாபாரி மெஹுல் சோக்சி ஆகியோருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளது.


வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற, நிரவ் மோடி, சோக்சி உள்ளிட்டோரை நாடு கடத்தும்படி, சி.பி.ஐ., மூலம் சர்வதேச போலீஸ் அமைப்பான, 'இன்டர்போலுக்கு' கோரிக்கை அனுப்பப்பட்டது. இதில், நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது.


'சோக்சிக்கு எதிராகவும், ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக, இன்டர்போலுக்கு நினைவூட்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.



குற்றச்சாட்டு:




இந்நிலையில், அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட பகுதியில், கரீபியன் தீவுகளில் ஒன்றான, ஆன்டிகுவாவின் குடியுரிமை பெற்று, சோக்சி அங்கு தங்கியுள்ளார்.


நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் கூறியதாவது: என் மீது, அமலாக்கத் துறை கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை; ஆதாரமில்லாதவை. இந்த பொய் வழக்குகளில், சட்டவிரோதமாக என் சொத்துகளை முடக்கியுள்ளனர். இவ்வாறு, வீடியோவில் அவர் கூறியுள்ளார்.


ரெட் கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்ட ஒரு நபர், எந்த நாட்டிலிருந்தாலும், அவரை கைது செய்து, உரிய நாட்டிடம் ஒப்படைக்க வேண்டியது, இன்டர்போல் எனப்படும், சர்வதேச போலீசின் பொறுப்பு.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    உண்மை உனக்கு தெரியும். ஆனால் சொல்ல ராகுல் அனுமதி வேண்டும்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    குற்றசாட்டுகள் பொய் என்றால் நீங்கள் ஏன் ஓடி போய் விட்டிர்கள்...

  • Darmavan - Chennai,இந்தியா

    இந்த மாதிரி கருத்து சொல்வதைவிட இவனை திரும்ப கொண்டுவரும் வழி சொன்னால் உதவியாக இருக்கும். இதில் அமலாக்கத்துறையில் கருப்பு ஆடுகள் இருப்பதாக தெரிகிறது

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    எனக்கென்னவோ இவன் சோனியாவின் பினாமி எனத்தோன்றுகிறது .வெளிநாட்டிலிருந்த போது விசாரணை நடப்பது பற்றிய விவரத்தை வங்கியில் வேலை செய்யும் காங்கிரசுக்கு வேண்டிய ஆள் தகவல் கொடுத்திருக்கிறான் . விசாரணை வெளியில் தெரிவதற்குமுன் அந்நிய குடியுரிமையே வாங்கிவிட்டதால் இனி இங்கு கொண்டுவருவது கடினம்

  • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

    டே ..திருட்டு பயலே ...மடியில கணம் இல்லைன்னா எதுக்குடா இங்க இருந்து ஓடிப்போன ? அந்த நாட்டு குடியுரிமை பெற வேண்டிய அவசியம் என்ன ? சிக்கல் வரும்ன்னு தெரிஞ்சே தான் நீ அந்த நாட்டை தேர்ந்தெடுத்து குடியுரிமை வாங்கி இருக்க..இது தான் உண்மை...

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    உத்தமன் போல பெனாத்தும் இவனை உடனே கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும்... செட்டியாருக்கு எந்த வழியில் பணம் கொடுத்தான் என்று விசாரிக்கவேண்டும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement