Advertisement

பாலியல் புகாரால் கேந்திரிய பள்ளி முதல்வர் காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவு

திருவண்ணாமலை: பாலியல் புகார் எதிரொலியாக, திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரை, காத்திருப்போர் பட்டியலில் வைக்க, கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். திருவண்ணாமலை அடுத்த, கனந்தம்பூண்டியில், கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த ஆக., 13ல், பள்ளி முதல்வராக குமார்தாக்கூர் என்பவர் பொறுப்பேற்றார். இவர், பெங்களூரில் கேந்திரியா வித்யாலயா பள்ளியில், பணிபுரிந்த போது பாலியல் புகாரில் சிக்கி, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது, பெற்றோர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவரை பணியிடமாற்றம் செய்யும் வரை, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம், எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க, கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement