Advertisement

மொபைல்போன் கடையில் தாக்குதல்: தி.மு.க.,வினர் இருவர் அதிரடி கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, மொபைல்போன் கடையில் தாக்குதல் நடத்திய, தி.மு.க., பிரமுகர் உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அடுத்த, குயிலத்தை சேர்ந்த ரகுபதி, 29, தண்டராம்பட்டு தி.மு.க., மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். இவர், தன் நண்பர் கணேஷ், 26, என்பவருடன் தானிப்பாடி பஸ் ஸ்டாண்டில், மொபைல்போன் பழுது பார்க்கும் கடை வைத்திருக்கும் மணிவண்ணன் என்பவரிடம், மொபைல்போனை பழுது பார்க்க கொடுத்துள்ளார். அப்போது, போனை உடனடியாக சரி செய்யக்கோரி, ரகுபதி மிரட்டினார். மறுநாள் வந்து, வாங்கி கொள்ளுமாறு, கடை உரிமையாளர் கூறினார். ஆத்திரமடைந்த ரகுபதி, கணேஷ் ஆகியோர் சேர்ந்து, நாற்காலிகளை எடுத்து, மணிவண்ணன் மற்றும் ஊழியர் ஒருவரையும் தாக்கினர். இதில், தலையில் காயமடைந்த மணிவண்ணன், தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகார் மற்றும் 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து, தி.மு.க., பிரமுகர் ரகுபதி, கணேஷ் ஆகியோரை, தானிப்பாடி போலீசார் கைது செய்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement