Advertisement

போலீஸ் ஸ்டேஷனில் பைக் திருடன் தற்கொலை முயற்சி

குடியாத்தம்: போலீஸ் ஸ்டேஷனில் கழுத்தை அறுத்து, பைக் திருடன் தற்கொலைக்கு முயன்றான். வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் தலைமையிலான போலீசார், பேர்ணாம்பட்டில் பதுங்கியிருந்த பைக் திருடன் விக்னேஷ், 28, என்பவரை கைது செய்தனர். குடியாத்தம் டவுன் ஸ்டேஷனில், அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இரவு, 7:30 மணிக்கு, சிறுநீர் கழிப்பதாக கழிவறை சென்ற விக்னேஷ், ஆக்?ஷா பிளேடால் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயன்றார். மயக்கமடைந்த அவரை மீட்ட போலீசார், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement