Advertisement

செம்மரம் கடத்தல் ஏஜென்டுகளை பிடிக்க சிறப்பு புலனாய்வு போலீசார் தேடுதல் வேட்டை

வேலூர்: ஆந்திர மாநிலம், திருப்பதி, கடப்பா, கர்நூல் பகுதிகளில் லட்சக்கணக்கான செம்மரங்கள் உள்ளன. இவற்றை, வெட்டி கடத்த, தமிழகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். கடந்த, மூன்று மாதங்களில், 2,000க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் ஆந்திராவுக்கு வந்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் உள்ள செம்மரக்கட்டை முகவர்கள், ஆசை வார்த்தை கூறி அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதனால், முகவர்களை பிடித்தால், கூலி தொழிலாளர்கள் வருவது குறையும் என்பதால், அவர்களை பிடிக்க ஆந்திர மாநில சிறப்பு புலனாய்வு போலீசார், வேலூர் வந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: வேலூர் மாவட்டம், ஆம்பூர், புதூர்நாடு, திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல், போளூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் அதிகளவு ஏஜென்டுகள் உள்ளனர். தமிழக போலீசார் உதவியோடு, இவர்கள் பெயர், விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் நடமாட்டத்தை கண்காணித்து, கைது செய்வோம். அவர்கள் மீது, இரண்டு ஆண்டுகள் வெளியே வர முடியாதபடி வழக்குகள் போடப்படும். கடந்த, ஆறு மாதங்களில் செம்மரம் வெட்ட வந்த கூலித் தொழிலாளர்கள், 1,400 பேர் கைது செய்யப்பட்டு, சித்தூர், கடப்பா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement