Advertisement

சிக்கலில் சோனியா, ராகுல்

புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடைய காங்., தலைவர் ராகுல், சோனியா ஆகியோரின் வருமான வரி கணக்குகளை மீண்டும் விசாரிக்க கூடாது என கோரிய மனுக்களை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, இது அவர்கள் இருவருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

1938ல் துவக்கப்பட்ட பத்திரிகைநாட்டின் முதல் பிரதமர் நேருவால் 1938ல் துவக்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் இந்த பத்திரிகை உட்பட மேலும் சில பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு வந்தன.

தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததால், 2008 ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. எனினும், காங்கிரஸ் கட்சியிடம் பெற்ற 90 கோடி ரூபாய் கடனுதவியுடன் அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்க முயன்றது. இந்நிறுவனத்திற்கு, 2,000 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன.

ரூ.2,000 கோடி சொத்து2010ம் ஆண்டு யங் இந்தியா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில், சோனியா, ராகுல் உள்ளிட்ட சில காங்., தலைவர்கள் உறுப்பினராக உள்ளனர். அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம், காங்கிரசிடம் இருந்து பெற்ற 90 கோடி ரூபாய் கடனை திரும்ப வசூலிக்கும் உரிமையை யங் இந்தியா அமைப்பு பெற்றது. இதை முன்னிறுத்தி, அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கிட்டத்தட்ட அனைத்து பங்குகளும், 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்ட யங் இந்தியா அமைப்புக்கு கை மாறியது. இதன்மூலம் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் யங் இந்தியா அமைப்புக்கு கை மாறும் சூழ்நிலையும் உருவானது.


இதை எதிர்த்து பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து வருமான வரித்துறையும் நடவடிக்கையில் இறங்கியது. ராகுலின் 2011 - 12 ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கில் யங் இந்தியா அமைப்பில் ராகுலுக்கு உள்ள பங்குகள் மூலம் கிடைத்த வருவாய் 68 லட்சம் ரூபாய் என முதலில் கணக்கிடப்பட்டது தவறு, அவரது வருவாய் 249 கோடி ரூபாய் என கூறியது.

எனவே, ராகுல், சோனியா உள்ளிட்ட காங்., தலைவர்களின் 2011 - 12ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை மீண்டும் விசாரிக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து ராகுல், சோனியா சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது ராகுல், சோனியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


இப்பிரச்னையை கையில் எடுக்க பா.ஜ., தீவிரமாக உள்ளது.Advertisement

வாசகர் கருத்து (36)

 • Rags - dmr188330,இந்தியா

  வருமான வரி நிபுணர் பழைய மந்திரி சோனியா வக்கீல் சிதம்பரம் ஐயா இது பற்றி என்ன கருத்து கூறுவார். திட்டமிட்ட சதி பழிவாங்குதல்......

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  காந்தியால் திணிக்கப்பட்ட முதல் பிரதமரான நேருவின் குடும்ப வாரிசுகளின் ஊழல்களையும் ஆட்சி அலங்கோலங்களையும் பார்த்து பாரத நாட்டின் பொருளாதாரம் ரத்த கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. சோனியாவால் பீடிக்கப்பட்ட அனைத்து கான்கிராஸ் தலைவர்களும் ஊழல் நோயால் ஆட்க்கொண்டு விட்டார்கள். பாஜகவின் கடேசி ஆட்சியில் அமெரிக்க டாலர் மதிப்பு 37 ரூபாயாக இருந்தது. பின்பு வந்த உலக மகா 10 வருட ஊழலாட்சியில் நாடு நாசமாகியது அனைவரும் அறிந்ததே. வாராது வந்த மாமணி மோடி இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்த படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அதையும் குறைகூறிக் கொண்டு 'மதசார்பற்ற' தேசவிரோத கும்பல்கள் பேயாட்டம் போட்டுக் கொண்டிருகின்றன. இதை தவிர்க்க மோடியரசாங்கம் Economic emergency அமுல் படுத்த வேண்டும். காலம் தாழ்த்துதல் கூடாது.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இவர்களுடைய மோடி எதிர்ப்பே, இதற்குத்தான். தாங்கள் சுருட்டிய பணத்தை தக்க வைப்பதற்க்காக, பெட்ரோல் விலை அதிகம் என்று போராட்டம். திருடர்கள். தீயமுக்க கலகமும் இதனால்தான் பாஜக அரசை எதிர்க்கிறது.

 • ManiS -

  We have seen that coal scam with Sipal. It is nothing for us.

 • s t rajan - chennai,இந்தியா

  அடிப் போங்கய்யா.... சுப்ரீம் கோர்ட்டே அவங்க பையிலே..... ஹை கோர்ட் என்ன ஜுஜுபி. போபர்ஸ்லயே வெளிய வந்துட்டாங்க. மக்களா பார்த்து ஒழிக்காவிட்டா இந்த மாக்கள் கொள்ளை அடிச்சுகிட்டே இருக்கும்....

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அதான் சுப்ரீம் கோர்ட்டே அவங்களுது ஆச்சே. அப்புறம் என்ன?

 • vnatarajan - chennai,இந்தியா

  ஒன்று பங்கை என்ன விலைக்கு யங் இந்தியா நிறுவனம் வாங்கியது என்று தெரியவேண்டும். ஏனென்றால் யங் இந்தியாவின் முதலீடே வெறும் 50 லச்சம் தானே. சிறு புழுவை கொக்கியில் மாட்டி பெரிய முதலையை சோனியா ராகுல் பிடித்துவிட்டார்கள் . பிஜேபி அவர்களை பாராட்டுவதை விட்டுவிட்டு அவர்கள்மேல் கேசு கேஸுன்னுபோட்டு பயமுறுத்தறீங்களே. .

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  எவ்வளவு சிக்கல் வந்தாலும் முட்டு கொடுக்க பெரிய கூட்டம் இருக்கும்போது நமக்கென்ன கவலை.. சிறுபான்மை மதம், ஜாதியினர் எல்லாருக்கும் எலும்பு துண்டு போட்டு வளர்த்திருக்கோமே, சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் வரைக்கும் நம்ம கன்டிரோல்ல.. சும்மா விட்டுறுவோமா?? வின்சி யின் மைண்ட் வாய்ஸ்..

 • ganapati sb - coimbatore,இந்தியா

  தேசத்திற்காக உயிர் நீத்த இந்திரா ராஜீவ் வாரிசுகளான சோனியாவை ராகுலை தவறாக வழிநடத்துபவர்கள் யார் வாடிகனா இத்தாலியா

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  தந்திரோபாயங்கள் நிறைந்த அரசியலில் காங்கிரஸ் பாஜகவுக்கு மூத்தவர்கள்.

 • Ramesh - Bangalore,இந்தியா

  All drama is being conducted by Congress party to escape from this case where Sonia and Rahul are caught REDHANDED....

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  இந்த செய்தி நேற்றே வட இந்திய செய்தி தாள்கள் மற்றும் டி.வி க்களில் பெரும் விவாத பொருளானது ...

 • C.Elumalai - Chennai,இந்தியா

  249கோடி 68லட்சத்துக்கு சுருங்கிவிட்டது, பரியை நரியாக்கின கதையாகும். என்னஇருந்தாலாம்,சிறுபான்மையை, மதத்தவரை இப்படி சீரழிக்கவேண்டாம்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஆளும் கட்சியாக இருக்கும் பொது பல தவறுகள் செய்திருக்கிறார்கள் , தோண்ட தோண்ட வந்து கொணடே இருக்கும்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் ஏன் ?

 • பாரதன். - ,

  இவர்கள் இதற்கெல்லாம் அசரமாட்டார்கள். பல லட்சம் கோடிகளை விழுங்கியவர்களுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா. வெட்கம் இல்லாமல் இதற்கும் நியாயம் சொல்வார்கள். பாருங்கள்.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  இது ஒரு உப்பு பெறாத கேஸ். யாருக்கும் தண்டனை கிடைக்க சான்ஸே இல்லை....

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இப்போதே ராகுல் பினாத்திக்கொண்டுதான் இருக்கிறார். இதற்கு அப்புறம் கேட்கவே வேண்டாம்.

 • மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த நம்ம ஊரு நாரதர் ஒரு பய புள்ளையையும் விட்டு வைக்கவில்லை போல எல்லாத்தையும் நொண்டி நாங்க எடுறாருய்யா ஒருவிதத்தில் சந்தோஷம்தான் எல்லாமே கொள்ளை அடித்த பணம்தானே இப்படியும் ஒரு ஆள் கண்டிப்பாக வேண்டும் இல்லை என்றாலும் ஓவரா ஆடுவதாக பயபுள்ளைக

 • Balasubramaniam - Tirupur,இந்தியா

  இந்தியா ஒரு கொள்ளை கும்பலிடம் இருந்து தப்பி ஒரு நாடக கம்பெனி இடம் மாட்டிக்கொண்டது.

 • Anand - chennai,இந்தியா

  தமிழகத்தின் விஞ்ஞானம் இத்தாலி வரைக்கும் பரவியுள்ளது. தமிழன்டா.....

 • nabikal naayakam - தூத்துக்குடி,இந்தியா

  வாடிகனின் சூழ்ச்சி முறியடிக்கப்படவேண்டும். இதற்கு சுப்பிரமணியன் சுவாமிதான் அருள்புரிய வேண்டும்.

 • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

  இந்த குடும்பம் இந்தியாமீது விழுந்த சாபம். பிரிவினையின் போது நாம் நேருவை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால்.. போனால் போகட்டும் அவரது பூர்விகமான காஸ்மீரையும் சேர்த்து பாகிஸ்தானுக்கு கொடுத்து விட்டிருந்தால், இந்தியா என்ற நாடு ஒரு மிகப்பெரும் சாபத்திலிருந்து தப்பியிருக்கும். ஒரு ஊழல் குடும்பம் , தான் கொள்கைகளால் ஒரு முஸ்லீம் என்று தன்னை தானே பறை சாற்றி கொண்ட ஒருவரின் குடும்பம் முஸ்லீம் நாடான பாகிஸ்தானுடன் ஐக்கியமாயிருக்கும். இந்தியா உருப்பட்டிருக்கும்.

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்தியாவின் பொருளாதார சிக்கலுக்கும் அரசியல் சிக்கலுக்கும் இவர்கள் தான் காரணம். சுயநலனுக்காக பாரம்பரியமிக்க காங்கிரஸ்கட்சியையே சிதைத்தவர்கள். நாட்டில் மதப்பாகுபாடு ஜாதி பாகுபாடு ஏற்பட இவர்களே காரணம். பெருன்பான்மையினருக்கு எதிராக சிறுபான்மையினரை கொம்புசீவி விட்டு பகைமையை உருவாக்கி அதன்மூலம் கிடைத்த அரசியல் லாபத்தில் குளிர்காய்ந்தவர்கள். இவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்...

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  அப்படியே தமிழ்நாட்டுல டி.வி மற்றும் பத்திரிகை அலுவலகத்திற்கும் வருவீர்களா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement