Advertisement

பெட்ரோல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும்: முதல்வர்

சேலம்: பெட்ரோல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.


சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நிலை தெளிவாக உள்ளது. மேகதாதுவில் புதிய அணை கட்டப்படக்கூடாது. தமிழகத்தில் வறட்சி நிலவிய காலத்தில் , குடிக்க கூட தண்ணீர் திறக்கவில்லை. புதிய அணை கட்டினால், தமிழகம் பாதிக்கப்படும். இந்த விவகாரத்தை சட்டரீதியாக அணுகுவோம்


குட்கா ஊழல்



ஒருவர் மீது குற்றச்சாட்டு சொல்வதால் மட்டும் அவர், குற்றவாளியாகிவிட மாட்டார். குற்றச்சட்டு நிருபிக்கப்பட்டால் மட்டுமே குற்றவாளி. வேண்டுமென்ற திட்டமிட்டு குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன. தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. பல வகைகளில் அதனை தடை செய்ய பார்த்தனர்.இது முடியாததால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சொல்கின்றனர். தமிழக அரசில் எந்த துறையிலும் தவறு நடந்ததாக தெரியவில்லை.


வரி குறைப்பு



பெட்ரோல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். அவர்கள்தான் உயர்த்துகின்றனர். நிதி ஆதாரத்தை பெருக்குவது தான் தமிழக அரசின்நிலை. அப்போது தான் திட்டங்கள் நிறைவேற்றப்படும். இருப்பினும் வரி குறைத்து யோசனை செய்யப்படும் என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (11)

  • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

    மற்ற மாநிலங்கள் VATவரியை குறைத்துள்ளன... அடலீஸ்ட் டீசலுக்காவது குறைத்தால் அத்தியாவசிய பொருட்கள்விலை அதிகம் கூடாது...செய்யுமா எடப்பாடி அரசு?

  • N.Rajagopalan - Chennai,இந்தியா

    தினமலருக்கு ஒரு வேண்டுகோள் .மாநிலவாரியாக வரியில் மத்திய அரசு பெறுவது எவ்வளவு ,மாநிலம் பெறுவது எவ்வளவு என்று ரூபாயில் லிஸ்ட் கொடுத்தால் மாநிலங்களின் குட்டு வெளிப்படும்

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    இதை யார் கேட்டது... குட்கா விவகாரத்தை பற்றி மூச்சே காணோமே ...

  • Darmavan - Chennai,இந்தியா

    மத்திய அரசு கொடுக்கும் பங்கையும் சேர்த்து மாநிலத்துக்கு வரும் வருவாய் என்ன என்பதை சொல்லியிருக்கவேண்டும்.எதனை சதவீதம் என்று .அப்போது யார் குற்றவாளியென்பது திரியும்.

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    முதல்வரே அம்மாவின் ஆசி பெற்ற ஆட்சியாளர்கள் மனது வைத்தால் பெட்ரோல் டீசல் விலையை சிறிது குறைக்கலாம் ..மக்களை பற்றியும் சிறிது சிந்தியுங்கள்

  • SridharSambandham -

    திருடன் என்று ஒப்புக்கொண்டான் நான் திருடினேன் என்று!!!!!!

  • R chandar - chennai,இந்தியா

    Kindly stop unwanted freebies like sarees and dhoties for pongal instead it should be given only for the needy people and not for all ration card holder

  • vbs manian - hyderabad,இந்தியா

    மாநில அரசும்தான் வாட் வரி விதிக்கிறது அதை குறைக்க மனசு வரவில்லையே.

    • Sudarsanr - Muscat,ஓமன்

      மத்திய வரியை விட ணணைத்து மாநிலத்திலும் வாட் வரி அதிகம்.. மேலும் மத்திய வரியின் பெரும்பகுதி மாநிலங்களுக்கே திருப்பி தரப்படுகிறது...

  • CSCSCS - CHENNAI,இந்தியா

    ஆந்திர அரசைபோல தமிழ்நாடு மாநில அரசும் விலையைக்குறைக்க வேண்டும்

    • தமிழன் - ,

      இப்போ உருவான மாநிலம் ஆந்திர, அவுங்களுக்கு இல்லாத நிதி பற்றாகுறை தமிழ்நாடுக்கு எப்படி வந்தது. ஆந்திர மாநிலம் குறைத்த போல் நீங்களும் குறைக்கலாம்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement