Advertisement

மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவன் கைது

உடுமலை:உடுமலை அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள உடுக்கம்பாளையம், மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த, முருகன், 37; கூலித்தொழிலாளி. இவரது மனைவி, 10 ஆண்டுக்கு முன் பிரிந்து சென்று விட்டார்.
பெண்களிடம் தகாத முறையில் நடந்து வந்த முருகன், இரண்டு நாட்களுக்கு முன், அதே கிராமத்தை சேர்ந்த, 30 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தான். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்தனர். முருகன் அங்கிருந்து தப்பினான். பெண்ணை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
பெண்ணின் தந்தை கொடுத்த புகாரையடுத்து, உடுமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த முருகனை பிடித்து, சிறையில் அடைத்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement