Advertisement

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம்: காங்., முடிவு

தேனி;'பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்படும்,''என, காங்., முன்னாள் எம்.பி., ஆரூண் தெரிவித்தார்.

தேனியில் அவர் கூறியதாவது:பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், பணமதிப்பு இழப்பால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காங்., தலைமை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் எம்.பி.,க்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விலை ஏற்றத்தால் விவசாயிகள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தாலுகா அளவில் காங்., கட்சியினர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement