Advertisement

தொப்பை போலீஸ் வழக்கில் கெஜ்ரிவால் விடுவிப்பு

புதுடில்லி: போலீசாரை துல்லா என லந்தடித்த வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார்.


டில்லி போலீசாரை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டியும் டில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்குவதுதொடர்பாக, கடந்த 2016-ம் ஆண்டு 'டிவி' சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த முதல்வர் கெஜ்ரிவால், போலீசார் பற்றி குறிப்பிடும் போது, 'துல்லா' ( தொப்பை போலீஸ்) என்ற வார்த்தையில் லந்தடித்தாக கூறப்படுகிறது.

இது குறித்து அஜய்குமார் தனேஜா என்ற போலீஸ்காரர் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடர்ந்தார். அதில் இதுமாதிரியான வார்த்தையை கூறி இருப்பது கவலைக்குரியது. அவர் மீது கோர்ட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். , ஜூலை மாதம் நேரில் ஆஜராக, கெஜ்ரிவாலுக்கு, கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டது.

கடந்த இரண்டாண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று டில்லி பெருநகர கூடுதல் மாஜிஸ்திரேட் சமர் விஷால் அளித்த தீர்ப்பில், 'அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் இவ்வழக்கின் மனுதாரரான அஜய் குமார் தனேஜாவை குறிப்பிட்டு 'துல்லா' என்னும் வார்த்தையை அவர் குறிப்பிடவில்லை. இதனை அவதூறாக பொருள்கொள்ள முடியாது. மனுதாரரின் மனம் காயப்பட்டதாக எந்த சிறப்பான காரணமும் குறிப்பிடப்படவில்லை. இதனை அவதூறு வழக்காக விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து அரவிந்த் கெஜ்ரிவாலை கோர்ட் விடுவிக்கிறது என உத்தரவிட்டார்.

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  தொப்பயைக்குறை என்றுசொல்வது நம்நாட்டில் மிகவும் தவறாகப்படுகிறதோ காவலர்கள் மத்தியில்

 • Shanmuga Sundaram - Bangalore,இந்தியா

  " என லந்தடித்த" - ???? என்ன தமிழ் ? தினமலர் ஆசிரியரின் தகுதியா இது ?

 • MaRan - chennai,இந்தியா

  தினமலர் ஒரு தமிழ் நாளிதழ் ,,தூய தமிழில் செய்தியை எதிர்பார்க்கிறோம்,, லந்தடித்த என்ற வாரத்தை மதுரை வட்டார வழக்கு,, தூய தமிழில் கிண்டல் அல்லது, கேலி என்று சொல்லி இருக்கலாம்,, தினமலர் போன்ற நல்ல பாரம்பரியம் மிக்க நாளிதழ்களுக்கு இது அழகல்ல

 • Rajasekar - Trivandrum,இந்தியா

  இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு கொடுக்க நீதிமன்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகிறது???……

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் இரண்டே வருடங்களில் தீர்ப்பு வழங்கிய கோர்ட் பாராட்டுக்குரியது....

  • Suppan - Mumbai,இந்தியா

   எந்த தொப்பை போலீஸாவது வழக்கு தொடுத்திருக்கலாம்? தீர்ப்பு வேறு விதமாக இருந்திருக்கும்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  துல்லா ன்னு சொல்றதுக்கு பதில் அப்துல்லா ன்னு சொல்லியிருந்தா வாக்குவங்கி பலப்பட்டிருக்குமே

  • anuthapi - ,

   தண்டிக்க பட்டிருந்தாலும் மோடி தான் காரணம் இந்தியாவில் உள்ள அனைத்து மத சார்பற்ற கட்சிகளும், ஜனநாயகத்திற்காக பாடுபடும் அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளும் என்று கூவி இருக்குமே.. இதற்கு காரணம் யார்?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இருக்கிறத சொன்னால் அப்பிடி என்ன கோபம் வருகிறது... அப்பிடி ரோஷம் உள்ள ஆள் தொப்பையை குறைக்க வேண்டியது தானே

 • ஆப்பு -

  செல்லமா வளர்க்கலாம்... ஆனா யாரும் சொல்லக் கூடாது. மனசு புண்படும் அதனால் இளைத்து விடுவார்கள்.

  • Muruga Vel - Chennai

   தொப்பை மாதிரி ஆப்பையும் வளர்க்க முடியுமா

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சும்மா சொல்லக்கூடாது ...தொப்பையை பார்க்க வேண்டும் என்றால் அது அவசியம் போலீஸ்காரரிடம் தான் காணலாம்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  துல்லா இருந்தால் தான் சாப்பிட முடியும்... இருக்கிறதை தானே சொன்னார்...

 • nicolethomson - bengalooru,இந்தியா

  கேஸுவாலு தொப்பைக்கு என்ன சொல்லலாம்?

  • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

   ஆட்சிக்கு வரும்போது எலும்பாய் வந்தான்.. இப்போது அவனும்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement