Advertisement

அனுமதியின்றி வெட்டிய மரங்கள்

திருமங்கலம்;திருமங்கலத்தில் வீடுகள் கட்ட குடியிருப்புகளில் வளர்ந்த மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டன.பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள தீயணைப்பு நிலைய ரோட்டில் இடது பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை ஒட்டி ரோட்டோரம் புங்கன் மரங்கள் வளர்ந்திருந்தன. இங்கு வீடுகள் கட்டும் பணிக்காக சிலர் நகராட்சி அனுமதியின்றி மரங்களின் அடிப்பகுதி வரை வெட்டி அகற்றியுள்ளனர். நகராட்சியும் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் புகார் கூறி உள்ளனர். விசாரணை நடப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement