Advertisement

கடைகள் மீது கல்வீச்சு: 947 பேர் கைது

மதுரை;பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருமங்கலத்தில் நேற்று நடந்த காங்., கூட்டணி கட்சிகள் நடத்திய போராட்டத்தில் கடைகள் மீது கல்வீசப்பட்டன. மதுரையில் மொத்தம் 120 பெண்கள் உட்பட 947 பேர் கைது செய்யப்பட்டனர்.


திருமங்கலத்தில் நேற்று கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பஸ்கள் இயங்கின. காங்., கூட்டணி கட்சியினர் உசிலம்பட்டி ரோட்டில் கடைகளை அடைக்குமாறு எச்சரித்தனர்.
ஒரு பேக்கரி மீது கல்வீசினர். டீ பட்டறை பாய்லர்களை கீழே தள்ளி கண்ணாடி டம்ளர்களை நொறுக்கினர். இதில் மேலாளர் ஆனந்தன் காயமடைந்தார்.

மதுரை நகரில் காங்., மேலிட பொறுப்பாளர் சஞ்சய் சத் தலைமையில் மக்கள் மற்றும் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மதுரை தலைமை தபால் நிலையம் மற்றும் அலங்காநல்லுார், ஹார்விபட்டி, திருநகர், அவனியாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சி, இ.கம்யூ., கட் சியைச் சேர்ந்த 361 பேர் கைது செய்யப்பட்டனர். மேலுார், உசிலம்பட்டி உட்பட புறநகரில் 87 பெண்கள் உட்பட 586 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement