Advertisement

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் : மெஹபூபா கட்சி புறக்கணிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இம்மாத இறுதியில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக, முன்னாள் முதல்வர், மெஹபூபா முப்தியின், மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்து உள்ளது.ஜம்மு - காஷ்மீரில், கவர்னர் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தின் படி, பிற மாநிலத்தவர்கள், இங்கு அசையா சொத்துகளை வாங்க முடியாது.
இந்நிலையில், 'மற்ற மாநிலத்தவர்களும், காஷ்மீர் மாநிலத்தில், அசையா சொத்துகளை வாங்குவதற்கு அனுமதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், பலர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கருத்தை கேட்டது.
அதற்கு, ஜம்மு -
காஷ்மீர் மாநில உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், இதற்கு பதில் அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதையடுத்து, மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, அக்கட்சியின் தலைவர், மெஹபூபா முப்தி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பாதுகாக்க, எந்த தியாகமும் செய்ய தயார்.
மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.
தற்போதுள்ள சூழ்நிலை சாதகமாக இல்லாததால், இம்மாத இறுதியில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க, மக்கள் ஜனநாயக கட்சி முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement