Advertisement

மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் மணல் கடத்திய டிராக்டர் டிப்பர்‚ மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த மேமாளூர் பிள்ளையார் கோவில் அருகே‚ டிராக்டர் டிப்பரில் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று மணல் கடத்திச் சென்ற டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து, பெருங்குருக்கையை சேர்ந்த தண்டபாணி மகன் செல்வராஜ்‚26; கைது செய்தனர்.
அதேபோல் அரகண்டநல்லுார்‚ போஸ்ட் ஆபீஸ் அருகே மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டியை பறிமுதல் செயதனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிந்து, அந்திலியை சேர்ந்த சீனுவாசன் மகன் ஸ்டாலினை தேடிவருகின்னர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement