Advertisement

பெற்றோர் கண் எதிரில் டிராக்டரில் சிக்கி குழந்தை பலி

செஞ்சி: மொபட்டில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை பெற்றோர் கண்ணெதிரில் டிராக்டரில் சிக்கி இறந்தது.
விழுப்புரம் அடுத்த சங்கீதமங்கலம் காலனியை சேர்ந்தவர் சத்தியநாராயணன்; இவர் நேற்று முன்தினம் மாலை தனது மனைவி கிளிரா மேரி, ஒரு வயது குழந்தை யோகேஷ் ஆகியோருடன் நேமூர் கூட்ரோட்டில் இருந்து சங்கீதமங்கலத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
வெங்காயகுப்பம் கூட்ரோடு அருகே சென்ற போது வைக்கோல் ஏற்றி கொண்டு முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்தி செல்ல முயன்றார். அப்போது மொபட் மீது டிராக்டர் உரசியதில், மொபட்டில் இருந்து யோகேஷ் தவறி கீழே விழுந்தார். அவர் மீது டிராக்டரின் முன்சக்கரம் ஏரியது. அதில் குழந்தை யோகேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேய இறந்தார்.
இதுகுறித்து கஞ்சனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement