Advertisement

புதுச்சேரியில் பஸ்கள் நிறுத்தம்

புதுச்சேரி: பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிராக நடத்தப்படும் பந்த் காரணமாக புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை.



கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை செல்லும் பஸ்கள் விழுப்புரம் வழியாக இயக்கப்படுகின்றன. பந்த் காரணமாக புதுச்சேரி பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



கிரண்பேடி எச்சரிக்கை : பந்த்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணைநிலை கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்யவும், போலீசார் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபடவும் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • ديفيد رافائيل - مدری,இந்தியா

    தமிழ் நாட்டில் உள்ள பெட்ரோல் விலையிலிருந்து புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் விலையானது ₹3.82 குறைவாக தானே இருக்கு. அங்க பந்த் இருக்க என்ன அவசியம்.

    • Karthik - Chennai,இந்தியா

      உங்கள் சிந்தனை சற்று மாறி சிந்தியுங்கள். அந்த விலையும் ஏற்றம் தானே. சிந்தனை சரியாக இருந்தால் எவரும் பிஜேபி சப்போர்ட் பண்ண மாட்டார்கள்

  • AR -

    இன்று வாகனங்களை இயக்கினால் தாக்கி உடைப்போம் என புதுவை ஊழல் முதல்வர் முன்னிலையில் அந்தக் கட்சித்தலைவர் வன்முறையைத் தூண்டும் வகையில் வகையில் பேசினான். எனக்கென்னவோ ..ல்வரே தூண்டியதாகத்தான் தோன்றுகிறது. துணைநிலை ஆளுநர் இந்த வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கக்கூடாது.

    • Karthik - Chennai

      இப்போ அங்கே அம்மணி ஆட்சி தான் நடக்குது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement