Advertisement

செலவுகளை குறைங்க: தேர்தல் கமிஷனுக்கு காங்., கடிதம்

புதுடில்லி: விரைவில் நடைபெற உள்ள மாநில சட்டசபை தேர்தல்களில் செலவுகளை குறைக்க தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி உள்ளது.


இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்துக்கு காங்.,கட்சி எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: ம.பி., ராஜஸ்தான், மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இந்த மாநிலங்களில் அரசு சார்பில் ஜன் ஆசிர்வாத் யாத்ரா, கவுரவ் யாத்ரா, மற்றும் விகாஷ்யாத்ரா என்ற பெயரில் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.


இந்த யாத்திரைகளில் பொது மக்கள் ஆர்வம் காட்ட வில்லை . யாத்திரை என்ற பெயரில் செலவிடப்படும் அனைத்து பொது செலவினங்களையும் நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

வரும் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் சட்டீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • Darmavan - Chennai,இந்தியா

    pappu/மைனோ/பிரியங்கா/வதேரா அவர்கள் குடும்பத்துக்கும் ஆகும் பாதுகாப்பு செலவை ஏன் குறைக்கக்கூடாது

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    ஆட்சியின் திட்டங்களையும் சாதனைகளையும்  மக்களிடையே கொண்டுசெல்ல யாத்திரைப் பிரச்சாரம் அவசியமே. இதனை செய்யாவிட்டால் ஒரு திட்டமுமில்லை சாதனைகளுமில்லை என இதே அந்நிய  வால்பிடி கும்பல்கள் கூச்சலிடும். இளிச்சவாய் மக்களும்கூட நம்ப இடமுண்டு.தோல்வி பயத்தில் எதிர்க்கட்சிகள்.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    எந்த விதமான அரசு அதிகார பதவியிலும்  இல்லாத இத்தாலியர் சோனியா வின் விளம்பரத்துக்கு (காங்.கு சொந்த மெஜாரிட்டியுமில்லாதபோது)UPA  அரசு செய்த செலவுகள் எத்தனை  ஆயிரம்கோடி? அதில் தமிழகத்தில் தேர்தலில் தோற்று எதிர்க்கட்சியாக இருந்த கருணாநிதியின் படங்களையும் அச்சிட்டிருந்தனரே. 

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    தேர்தல் கமிஷன் சொன்னா யார் கேட்கிறார்கள்... ?உண்மையா ஆகும் செலவை காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் கூட கொடுப்பதில்லை...

  • ramanathan - Ramanathapuram,இந்தியா

    இந்திய தேர்தல் நடைமுறைகளை விரைவாக மாற்றி அமைக்க வேண்டும். இன்னும் இருபதாண்டுகளுக்கு தேர்தல் தேவையில்லை. இந்தியா ஜனநாயக அரசியலால் பெரிய அளவில் வளர்ச்சி அடையப்போவதில்லை.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    யாத்திரையா. பொழப்பா.

  • bugindia - ,

    Karnataka thalai nagaraana bengaluru managarathil, congress katchi arasiyal vadigal makkal panattai veenadithu vilambaram thedum ayogya thanam innum oya villai.

  • N.Purushothaman - Cuddalore,இந்தியா

    காங்கிரஸ் கட்சிக்கு கூட்டம் , பேரணி நடத்த கூட நிதி இல்லாம தள்ளாடுகிறது என்று வட இந்திய பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி உள்ளது ..

  • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

    இவங்க ஆளும் கட்சியா இருந்தப்போ செய்யாத செலவா ? ஊருக்கு உபதேசம் ??????????//

  • ஆப்பு -

    ஆளும் கட்சியினர் வழக்கமா செய்வதுதானே...எதிர்க்கட்சியினர் வழக்கமான வயத்தெரிச்சல் தானே...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement