Advertisement

பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு

ஜெய்ப்பூர்: பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு . இந்த வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்தது.


நாடு முழுவதும் பெட்ரோல் விலை ரூ.80-க்கும் டீசல் விலை ரூ.76-க்கும் குறையாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.


சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது மற்றும் கச்சா எண்ணெய் விலை மற்றும் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதால் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 10-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த போவதாக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் பா.., ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் , பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்துள்ளதாக மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.மக்களின் மீதான சுமையை குறைக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பெட்ரோல்ரூ. 83.26 -க்கும் டீசல் ரூ.77.17க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Advertisement
 

வாசகர் கருத்து (14)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    பழனியும் ithai பின்பற்றலாமே

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    தேர்தல் வருது இல்லையோ

    • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

      செய்தாலும் தவறு......இல்லையென்றாலும் தவறு

    • Karthik - Chennai,இந்தியா

      பல்ராம் சார் அப்படி நம்ம மஸ்தானை குறைக்க சொல்லுங்க .

    • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

      அவர் குறைக்கவும் வேண்டாம் மானியம் என்ற பெயரில் கடனும் வாங்க வேண்டாம்.....இப்போது காங்கிரஸ் வாங்கி வைத்து போன எண்ணெய் மானியத்திற்க்கான கடனை அடைத்து உள்ளார்

    • Karthik - Chennai,இந்தியா

      எண்ணெய் மானியத்திற்க்கான கடனை அடைத்து உள்ளார் என்று சொல்லும் நீங்கள் அதை ஏன் தலை முதல் வால் வரை சொல்ல பயப்படவேண்டும். அங்கு தான் சந்தேகம் வருகிறது.

  • jambukalyan - Chennai,இந்தியா

    எல்லா மாநில அரசுகளும் இதேபோல் வரி குறைத்து, மத்திய அரசையும் வரி குறைக்கும்படி போராடலாமே?

    • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

      மத்திய அரசு வாங்கும் கலால் வரியில் நாற்பத்தி ரெண்டு சதவிகிதம் மாநில அரசுக்கு தான் வழங்க படுகிறது. மேலும் எட்டு ரூபாய் "பிரதான் மந்திரி சடக் யோஜனா" அதாவது நெடுஞ்சாலை நிர்மாணத்திற்கு போகிறது. இதற்கு பிறகு வெறும் 5 ரூபாய் மாத்திரமே மத்திய சர்காரிடம். குறைக்க வேண்டியது மத்திய சர்காரா? மாநில அரசா? மாநில வருவாயில் 55 % பெட்ரோல் மற்றும் டீசல் கு போடும் வாட் வரியில் இருந்து தான்

    • Karthik - Chennai,இந்தியா

      நீங்க நாடு முழுவதும் உங்க ஆட்சி என்று பெருமை பேசும் நீங்கள் இது போல எல்லா மாநிலத்திலும் கொண்டு வரலாமே?

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    மற்ற மாநிலங்கள் இந்த மாதிரி வரி குறைக்க வேண்டும். பெட்ரோல் விலை அதிகமாக உயரும் பொழுது அரசுக்கு வரி வருவாயும் அதிகரிக்கிறது.

    • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

      குறைக்க வேண்டியது மாநில அரசு தான்..... மத்திய அரசு இல்லை

    • Karthik - Chennai,இந்தியா

      பிஜேபி ஆளும் மாநிலத்தில்?

    • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

      அவர்கள் அப்படி குறைக்காமல் இருந்த காரணத்தால் தான் வாங்கிய கடனை அடைத்து வருகிறார்

  • Narayanan Muthu - chennai,இந்தியா

    Election betrayal work started by BJP in Rajasthan.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement