Advertisement

இருவர் பலி

சென்னை:வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துக்களில் இருவர் பலியாகினர்.
சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆர்., சாலையை, 6ம் தேதி நள்ளிரவு, 45 வயது மதிக்கத்தக்க நபர் கடக்க முயன்றார்.அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த அவர், ராஜிவ் அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை பலியானார்.
• துாத்துக்குடியைச் சேர்ந்தவர், காளிமுத்து, 26. சென்னை, அயப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று காலை, அண்ணனுார் ரயில் நிலைய தண்டவாளத்தை கடந்த போது ரயிலில் அடிபட்டு, உயிரிழந்தார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement