Advertisement

மின் வாரிய அலுவலகம் பொதுமக்கள் முற்றுகை

சிங்கபெருமாள்கோவில்:மின் வெட்டை கண்டித்து, சிங்கபெருமாள் கோவில் மின்வாரிய அலுவலகத்தை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சிங்கபெருமாள் ஊராட்சியில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, 15 நாட்களாக, அடிக்கடி மின் தடை ஏற்பட்டது.இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் இரவும், மின் தடை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், நள்ளிரவு, 12:15 மணிக்கு, மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊழியர்கள், பொதுமக்களுக்கு சரியான பதில் தெரிவிக்கவில்லை.தகவலறிந்து வந்த போலீசார் பேச்சு நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து, மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்தனர். வாகனம் மோதி மூதாட்டி பலிசெங்கல்பட்டு அடுத்த, வல்லம் கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன் என்பவரின் மனைவி சின்னம்மாள், 70. நேற்று முன்தினம் இரவு, செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் நடந்து
சென்றார்.
அப்போது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி, படுகாயமடைந்தார். அருகிலிருந்தோர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, நேற்று சின்னம்மாள் இறந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement